வேறொருவரிடம் கொடுத்தார்..தயாரித்து வந்த படத்தில் இருந்து திடீரென விலகிய இயக்குனர் ராஜமவுலி மகன்!

By

ஐதராபாத்: தான் தயாரித்து வந்த படத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார் பிரபல இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா.

பிரபல இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா. இவர் ராஜமவுலி இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தார்.

Rajamouli’s son Karthikeya opts out of maiden production Aakasavani

பாகுபலி படத்தில், செகண்ட் யூனிட் இயக்குனராகவும் பணியாற்றினார். இதையடுத்து இவரும் இயக்குனர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று தயாரிப்பாளர் ஆனார்.

ஆகாஷவாணி என்ற தெலுங்கு படத்தை அவர் தயாரித்து வந்தார். பீரியட் படமான இதை ராஜமவுலியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஸ்வின் கங்கராஜூ இயக்குகிறார். இந்தப் படம் தொடங்கி நடந்துவந்த நிலையில், இப்போது திடீரென அதன் தயாரிப்பு பொறுப்பில் இருந்து கார்த்திகேயா விலகியுள்ளார்.

https://twitter.com/ssk1122/status/1258977537889234945

இதை ட்விட்டரில், அவர் தெரிவித்துள்ளார். 'இந்தப் படத்தில் தயாரிப்பாளராக பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. சிலவற்றைக் கற்றுக்கொண்டேன். அதை வாழ்நாள் முழுவதும் மகிழ்வாக மனதின் வைத்திருப்பேன். இருந்தாலும் சில விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும்.

இந்தப் படத்தில் உற்சாகமாக பணியாற்ற முடிவெடுத்தாலும் லைன் புரொட்யூசராக இருக்கும் மற்ற படங்களிலும் அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறேன். சில நேரங்களில் அது என் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்கிறது.

அதோடு எனக்கும் இயக்குனருமான படைப்பு பார்வை நாளுக்கு நாள் வேறுபட்டு வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால் இயக்குனரின் படைப்புப் பார்வைக்கு சரியாக இருக்கும் ஒருவரிடம் படத்தை கொடுப்பதே சரியாக இருக்கும் என நினைத்தேன். அதனால், ஏயு மற்றும் ஐ ஸ்டுடியோவின் ஏ. பத்மநாப ரெட்டியிடம் படத்தை ஒப்படைக்கிறேன். இயக்குனர் அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். 'ஆகாஷவாணி' படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X