சுவாரஸ்யம் இல்லையாம்.. அந்த ஆஸ்கர் விருது படத்தைப் பார்க்கும்போது இந்த இயக்குனர் தூங்கிட்டாராம்ல!

By

ஐதராபாத்: அந்த ஆஸ்கர் விருதுபெற்ற படத்தைப் பார்க்கும்போது தூங்கிவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார், பிரபல இயக்குனர்.

Recommended Video

#RealManChallenge | RRR Director exact status | Sandeep Vanga Reddy

பாகுபலி படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம், ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது என்று கூறப்படுகிறது .

அறிமுகக் காட்சி

அறிமுகக் காட்சி

இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியாபட் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், ராம்சரணின் அறிமுகக் காட்சி சமீபத்தில் வெளியானது. மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டன. இதற்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தன.

பாரசைட்

பாரசைட்

கொரோனா வைரஸ் காரணமாக இதன் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஆஸ்கர் விருது வென்ற அந்தப் படத்தை பார்க்கும்போது தூங்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் நான்கு பிரிவுகளில் விருதை வென்ற படம், பாரசைட்.

ஆஸ்கர் வென்ற படம்

ஆஸ்கர் வென்ற படம்

சிறந்த படம், சிறந்த இயக்கம், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்ற இந்த கொரிய படத்தை போங் ஜூன் ஹோ இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம், ஆசியாவில் இருந்து அந்த விருதை வென்ற முதல் இயக்குனர் என்ற சாதனையை இவர் படைத்தார். இதனால், அதிகப் பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

தூங்கிவிட்டேன்

தூங்கிவிட்டேன்

இந்த படம் தமிழில் வெளியான 'மின்சார கண்ணா' படத்தின் கதையை ஒத்திருந்தது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் இந்தப் படம் பற்றி இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, இந்தப் படத்தை பார்க்கும்போது நான் தூங்கிவிட்டேன். படம் சுவாரஸ்யமாக இல்லை. எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

இதையடுத்து ஆஸ்கர் உட்பட சில விருதுகளை பெற்றுள்ள ஒரு படத்தை, இயக்குனராக இருந்து கொண்டு இப்படி விமர்சிப்பது சரிதானா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இயக்குனர் ராஜமவுலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X