ராமராக நடிக்க அந்த நடிகர் அப்படி பொருந்துவார்.. இயக்குநர் ராஜமெளலி மிஸ் பண்ணிட்டாரோ?

சென்னை: நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், இயக்குநர் ராஜமெளலி தனது கருத்தை கூறியுள்ளார்.

நடிகர் பிரபாஸை வைத்து பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கியவர் ராஜமெளலி.

தற்போது, ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக ராமாயணம் இதிகாசத்தை மையமாக படம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் எழுந்தது.

ராமாயண கதை

ராமாயண கதை

ஆனால், ராஜமெளலிக்கு முன்னதாக ராமாயண இதிகாச கதையை படமாக்க இயக்குநர் ஓம் ராவத் முந்திக் கொண்டார். மேலும், டி-சீரிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆதிபுருஷ் என்ற டைட்டிலில் ராமாயண கதையை இயக்கப் போவதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அசற வைத்தார்.

உடம்பை செதுக்குகிறார்

உடம்பை செதுக்குகிறார்

பாகுபலி கதாபாத்திரத்திற்காக தனது உடம்பை இரும்பாக செதுக்கிய நடிகர் பிரபாஸ், தற்போது ராமர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாரு உடல் தோற்றத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒரு வில்லாளன் எப்படி இருக்க வேண்டும் என்ற தோற்றத்தில் தன்னை ஒட்டுமொத்தமாக செதுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு செதுக்க ஆயத்தமாகி விட்டார்.

பக்கவா பொருந்துவார்

பக்கவா பொருந்துவார்

இந்நிலையில், ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் ராஜமெளலி, ராமர் கதாபாத்திரத்திற்கு நடிகர் பிரபாஸ் கணகச்சிதமாக பொருந்துவார் எனக் கூறியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பே இதன் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து பாராட்டினேன். இயக்குநர் ஓம் ராவத் நிச்சயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என்றும் கூறியுள்ளார்.

ராமர் கோயில்

ராமர் கோயில்

அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், ராமாயணம் தொடர்பான ஒரு திரைப்படத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு எடுக்கப்பட வேண்டிய காலக்கட்டம் உருவாகி உள்ளது என்றும், பல பெரிய நட்சத்திரங்களின் பங்களிப்பு தேவை என்றும் கூறியுள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில்

ராஜமெளலி இயக்கத்தில்

தூர்தர்ஷனில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் உலக சாதனை படைத்ததை தொடர்ந்து, ராமாயணம் படத்தை ராஜமெளலி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் எழுந்தது. ஆனால், தற்போது ஓம் ராவத் அந்த கதையை படமாக்க உள்ள நிலையில், ராஜமெளலி அதனை மிஸ் செய்து விட்டார் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷூட்டிங் எப்போ

ஷூட்டிங் எப்போ

மேலும், அந்த பேட்டியில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஷூட்டிங் எப்போ என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சையில் இருந்து மீண்ட இயக்குநர் ராஜமெளலி, மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தான் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் முடிவை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X