ராஜமவுலி பாலிவுட்டின் முகத்தில் சப்புன்னு அறைஞ்சுட்டார்: இயக்குனர் ராம் கோபால் வர்மா
ஹைதராபாத்: ஈத் இல்லை. தீபாவளி இல்லை. சல்மான் இல்லை. ஆமீர் இல்லை. ஷாருக் இல்லை ஆனாலும் டப்பிங் படமான பாகுபலி 2 ஓபனிங்கில் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. ராஜமவுலி பாலிவுட்டின் முகத்தில் அறைந்துவிட்டார் என்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக ரிலீஸானது. படம் வெளியான இரண்டே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அறை
ஈத் இல்லை. தீபாவளி இல்லை. சல்மான் இல்லை. ஆமீர் இல்லை. ஷாருக் இல்லை ஆனாலும் டப்பிங் படமான பாகுபலி 2 ஓபனிங்கில் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. ராஜமவுலி பாலிவுட்டின் முகத்தில் அறைந்துவிட்டார்.
பாலிவுட்
பாலிவுட்டில் உள்ள ஒவ்வொரு சூப்பர் ஸ்டாரும், சூப்பர் இயக்குனரும் ராஜமவுலியின் பாகுபலி 2 படத்தின் தாக்கத்தை பார்த்து நடுங்குகிறார்கள்.
பாகுபலி
உலகம் பிசி மற்றும் ஏடி என்று பிரிக்கப்பட்டது போன்று இந்திய சினிமா பிபி மற்றும் ஏபி(பாகுபலிக்கு முன் மற்றும் பாகுபலிக்கு பின்) என்று இருக்கப் போகிறது.
கரண் ஜோஹார்
பாகுபலி 2 படத்தை விரும்பும் அனைவரும் ராஜமவுலி போன்ற வைரத்தை கண்டுபிடித்த கரண் ஜோஹார் காலை தொட்டுக் கும்பிட வேண்டும்.


Click it and Unblock the Notifications











