அது கனவு படம்.. மகாபாரதத்தை படமாக்கும் பிரமாண்ட இயக்குனர்.. கிருஷ்ணர் வேடத்துக்கு அந்த ஹீரோதானாம்!

By

சென்னை: மகாபாரதம் தனது கனவு படம் என்றும் அதில் கிருஷ்ணர் வேடத்துக்கு அந்த ஹீரோதான் மனதில் இருக்கிறார் என்றும் இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து, 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (RRR) படத்தை இயக்கி வருகிறார், ராஜமௌலி.

வேகமாக நடந்து வந்த இதன் ஷூட்டிங், கொரோனா லாக்டவுன் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐரிஸ் நடிகை

ஐரிஸ் நடிகை

இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ரூ.400 கோடி செலவில் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது என்று கூறப்பட்டது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

ஆனால், இது கற்பனை கதைதான் என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட மேலும் சில மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், ராம்சரணின் அறிமுகக் காட்சி சமீபத்தில் வெளியானது. அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் இந்தி பதிப்பு காட்சியை வெளியிட, தெலுங்கு பதிப்பை ராம்சரண் மற்றும் ராஜமவுலி வெளியிட்டனர். தமிழ் பதிப்பை ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மகேஷ்பாபு

மகேஷ்பாபு

இதன் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா, கடந்த சில நாட்களுக்கு முன், 'படத்தின் 75 சதவிகித காட்சிகள் படமாக்கப் பட்டுவிட்டன' என்று கூறியிருந்தார். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இந்நிலையில், ராமாயணக் கதையை, ராஜமவுலி இயக்க வேண்டும் என ரசிகர்கள் #RajamouliMakeRamayan என்ற ஹேஷ்டேக்கை கடந்த சில நாட்களுக்கு முன் உருவக்கி ட்விட்டரில் டிரெண்ட்டாக்கினர். சரித்திர படங்களை சரியாகக் கையாளும் திறமை, ராஜமவுலிக்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மகாபாரதம்

மகாபாரதம்

ஆனாலும் இதற்கு முன்பு கூறியதைப் போல, இப்போதும் மகாபாரதம்தான் தனது கனவு படம் என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார். இதைக் கண்டிப்பாக இயக்குவேன் என்றும் ஆனால் எப்போது நடக்கும் என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கிருஷ்ணராக யாரை நடிக்க வைப்பீர்கள் என்று கேட்டதற்கு, இப்போதைக்கு என் மனதில் ஜூனியர் என்.டி.ஆர் இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X