டைட் செக்யூரிட்டி போட்டும் எப்படி லீக் ஆச்சு? டைரக்டர் ராஜமவுலி அப்செட்!
ஐதராபாத்: ஆர்ஆர்ஆர் பட ஷூட்டிங்கில் இருந்து ஜூனியர் என்டிஆரின் லுக், லீக் ஆனதால், இயக்குனர் ராஜமவுலி அப்செட் ஆகியுள்ளார்.
பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம், ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகினார். அவருக்குப் பதிலாக, ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ் ஒப்பந்தமானார்.
மேலும் தோர், கிங் ஆர்தர் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஜேம்ஸ்பாண்ட் படமான எ வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ், த லாஸ்ட் குருசேட் உட்பட பல படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.
பலத்த பாதுகாப்புடன் இதன் ஷூட்டிங் ஆந்திராவில் நடந்துவருகிறது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் காட்சியை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். லீக் ஆன அவரது லுக், சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் படக்குழு அதை நீக்கி வருகிறது.
இதற்கிடையே, இவ்வளவு டைட் செக்யூரிட்டி போட்டும், அந்த காட்சி வெளியானதால் இயக்குனர் ராஜமவுலி அப்செட்டானார். இதையடுத்து படப்பிடிப்புக்கு, பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளனர். ஷூட்டிங் நடக்கும் இடத்தில் யாரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











