வேற வழியில்ல... கிராஃபிக்ஸில் அனுஷ்காவை ஸ்லிம்மாக்கும் ராஜமௌலி!
இந்த இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் ஏன்டா நடித்தோம் என்று அனுஷ்கா ஃபீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்துக்காக ஏற்றிய எடையைத்தான் குறைக்க முடியாமல் அவதிப்படுகிறார். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது ராஜமௌலிதான்.
பாகுபலி 2 வின் க்ளைமாக்ஸில் அனுஷ்காவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. முதல் பாகத்தில் இளைத்தாற்போல் காட்டிவிட்டு இரண்டாம் பாகத்தில் அதன் தொடர்ச்சியில் எப்படி பூசினாற்போல் காட்ட முடியும்? அனுஷ்காவால் உடம்பை குறைக்கவும் முடியவில்லையாம்.

எனவே அனுஷ்காவை கிராஃபிக்ஸ் மூலம் ஸ்லிம் ஆக்கிக்கொண்டிருக்கிறாராம் ராஜமௌலி. இதனால்தான் பாகுபலி 2 தாமதமாகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
நல்ல இயக்குநருக்கு எப்படிலாம் சிக்கல் வருது?
Comments


Click it and Unblock the Notifications