PS2 Memes: என்னது தூக்கம் வருதா? ராஜமெளலியை விட மணிரத்னம் தான் கெத்து.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகி உள்ள நிலையில், மீண்டும் பாகுபலி 2 படத்துடன் கம்பேர் பண்ணும் வேலைகள் சோஷியல் மீடியாவில் ஜரூராக ஆரம்பித்து விட்டது.
இயக்குநர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தின் இரு பாகங்கள் தான் பொன்னியின் செல்வன் கதையை 2 பாகங்களில் சொல்ல முடியும் என்கிற நம்பிக்கையே கொடுத்தது என மணிரத்னமே பேசினாலும், டோலிவுட் ரசிகர்கள் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து இரு படங்களையும் கம்பேர் பண்ணி சண்டை போடுவதை விடுவதாக தெரியவில்லை.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தை பாராட்டியும் ட்ரோல் செய்து ஏகப்பட்ட மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.

கல்யாணத்துக்கு முன்னாடி தூங்கக் கூடாது: என்னோட லவ்வர் பொன்னியின் செல்வன் 2 பார்க்க வரச் சொன்னா, ஆனால், கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னா தூங்குறது ரொம்ப தப்புன்னு சொல்லிட்டேன் என டோலிவுட் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் 2 படத்தை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
மணிரத்னம் தான் மாஸ்: பாகுபலி இயக்கிய ராஜமெளலியை விட பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த மணிரத்னம் தான் மாஸ் என்றும் பாகுபலி படத்தின் சிலை டெம்பிளேட்டை வைத்தே ராஜமெளலியை விட மணிரத்னத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் உயர்த்தி பதிவிட்டுள்ள மீம்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்த ஒரு சீனுக்கு PS2 இணையாகாது: பாகுபலி 2 படத்தின் இந்தவொரு காட்சிக்கு பொன்னியின் செல்வன் 2 படம் இணையாகாது என பாகுபலி படத்தின் கிளைமேக்ஸ் வீடியோ காட்சிகளை டோலிவுட் ரசிகர்கள் போட்டு பொன்னியின் செல்வன் படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதே சமயம் ஆங்கிரி பேர்ட் காட்சிகளை வைத்துக் கொண்டு ஜிம்னாஸ்டிக் செய்யும் ஃபேக் பாகுபலியை விட நடிப்பிலும் திரைக்கதையிலும் பொன்னியின் செல்வன் வேறலெவலில் இருக்கு என தமிழ் சினிமா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
This scene >>>>> your so called shit #PonniyanSelvan2 #PS2Review pic.twitter.com/B9kDKcFt4B
— MANOJ_DHFP (@Mannu_prabha) April 28, 2023
ரெண்டுமே சூப்பர்: டோலிவுட் ரசிகர்களுக்கு பாகுபலி என்றால் கோலிவுட் ரசிகர்களுக்கு பொன்னியின் செல்வன் இரண்டு படங்களுமே சூப்பர். சண்டையை விடுத்து இதுபோன்ற பிரம்மாண்ட படங்களை கொண்டாடினால் தான் இயக்குநர்களும் இதுபோன்ற படங்களை எடுக்க முன் வருவார்கள் என இந்த ரசிகர் இரண்டையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Rajamouli vs Maniratnam: Kollywood and Tollywood fans fight starts with variety of PS2 Memes: பொன்னியின் செல்வன் 2 வெளியான நிலையில், ராஜமெளலியையும் மணிரத்னத்தையும் ஒப்பிட்டு ட்ரோல் மீம்கள் பறந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











