குஷி, வாலி போல யாராலும் படம் எடுக்க முடியாது.. எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டிய தயாரிப்பாளர்!

சென்னை : கடமையை செய் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், எஸ் ஜே சூர்யாவை வெகுவாக புகழ்ந்து பேசினார்.

முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட் ராகவன், தற்போது கடமையை செய் என்ற படத்தை இயக்கி உள்ளார். எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கடமையை செய் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படம் வரும் ஆகஸ்ட் 12ந் தேதி தேதி ரிலீஸாக உள்ளது.

எஸ் ஜே சூர்யா.

எஸ் ஜே சூர்யா.

ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

தலைவரே...தலைவரே

தலைவரே...தலைவரே

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சிம்புவின் மாநாடு திரைப்படத்தில், தலைவரே...தலைவரே என பேசி ஒட்டுமொத்த அப்ளாசையும் அள்ளினார்

சூர்யா திறமையானவர்

சூர்யா திறமையானவர்

கடமையை செய் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன்.கடமையை செய் பணத்தை எதிர்பார்க்காதே என நகைக்சுவையாக தனது பேச்சை தொடங்கினார். இந்த படத்தில் அருமை தம்பி எஸ்.ஜே. சூர்யா ஹீரோ, இப்போது பெரிய அளவில் வில்லனாக மாறிவிட்டார். இயக்கும், நடிகர், இசையமைப்பாளர் என அவருக்கு அனைத்து திறமையும் இருக்கு குஷி, வாலி படத்தை இவரைத்தவிர வேறு யாராலுமே பண்ண முடியாது அப்படி ஒரு திறமையானவர் எஸ்.ஜே. சூர்யா என்றார்.

தப்புதப்பா எழதாதீங்க

தப்புதப்பா எழதாதீங்க

கடமையை செய் படத்தின் கூட்டணி ஒரு அற்புதமான கூட்டணி இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். எஸ்.எஸ்.சூர்யாவுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கு என்றார். பத்திரிகையாளர்களே, ஊடக நண்பர்களே இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை எழுதுங்கள். தப்புதப்பா எழதாதீங்க சிலர் காசு கொடுத்தாத்தான் நல்ல எழுதுறான். இல்லனா தப்பு தப்பா எழுதுறான் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X