பிரபல ஹீரோ வீட்டில் குடும்பத்துடன் கொரோனா.. மருத்துவமனையில் அட்மிட்.. தீவிர சிகிச்சை!

By

சென்னை: பிரபல நடிகர் வீட்டில் குடும்பத்தோடு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர், ஜீவிதா. தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ராஜமரியாதை, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மன்னிக்க வேண்டுகிறேன்

மன்னிக்க வேண்டுகிறேன்

இவர், இதுதான்டா போலீஸ் படத்தில் நடித்த டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராஜசேகர், புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா ஆகிய இரண்டு மகள்கள்.

நடிக்கவில்லை

நடிக்கவில்லை

திருமணத்துக்கு பிறகு ஜீவிதா சினிமாவில் நடிக்கவில்லை. ராஜசேகர் நடித்த சில படங்களை இயக்கினார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவர்கள் மகள்களில் ஷிவாத்மிகா, தோராசானி என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஷிவானியும், சினிமாவில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கிசு கிசு

கொரோனா கிசு கிசு

இதுபற்றி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கிடையே, அந்தச் செய்தி உண்மைதான் என்று ராஜசேகர் உறுதிப்படுத்தி உள்ளார். தங்களுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று டாக்டர் ராஜசேகர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வீடு திரும்புவோம்

வீடு திரும்புவோம்

'ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். மகள்கள் வெளியேறிவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் வீடு திரும்புவோம் என்று டாக்டர் ராஜசேகர் அதில் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் நலம்பெற ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொற்று ஏற்பட்டு

தொற்று ஏற்பட்டு

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், விஷால் உள்பட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X