உதயநிதியோட ஜாய்ன் ஆன அழகு ஹீரோயின்... ஸ்க்ரீன்ல பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்

By Deepa S

சென்னை : பாலிவுட் ரீமேக்கான ஆர்ட்டிகல் 15 படத்தில் உதயநிதி ஸ்டாலின் லீட் ரோல் செய்வது தெரிந்த விஷயம்தான்.

இந்த டீம் சைலண்டாக முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ப்ரேக் விட்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சிறிது இடைவெளிக்கு பிறகு துவங்கவுள்ள நிலையில் தற்போது படத்தில் புது இணைப்பாக புது ஹீரோயின் இணைந்துள்ளார்.

லீட் ரோலில் உதயநிதி

லீட் ரோலில் உதயநிதி

பாலிவுட்டில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்வதும், அதில் லீட் ரோலில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருவதும் தெரிந்த விஷயம்தான். இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் சிறந்த தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஆரி சிறப்பு தோற்றம்

ஆரி சிறப்பு தோற்றம்

இந்த படத்தின் ஹீரோயினாக தான்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். ஆரியும் சிறப்பான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது ப்ரேக் விடப்பட்டுள்ளது. மீண்டும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் துவங்கவுள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பு

முதல்கட்ட படப்பிடிப்பு

சாதியவாதத்திற்கு எதிராக போராடும் ஒரு போலீஸ் ஆபிசர் வேடத்தில் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் நடித்துள்ளார். பொள்ளாச்சியில் சிறப்பான பகுதிகளில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் நடித்துவரும் உதயநிதி மகிழ் திருமேனியின் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஹீரோயின்கள்

இரண்டு ஹீரோயின்கள்

இந்நிலையில் படத்தில் புதிய இணைப்பாக ராஜசேகர் -ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் தற்போது இரண்டு ஹீரோயின்கள் இணைந்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்யுள்ளது.

போலீஸ் ஆபிசர்

போலீஸ் ஆபிசர்

பாலிவுட்டில் மிகவும் சிறப்பான ஹிட்டை கொடுத்தது ஆர்ட்டிகல் 15. இதே வரவேற்பு தமிழிலும் எதிர்பார்க்கப்படுகிறது. தான் நடித்துள்ள படங்களில் போலீஸ் ஆபிசர் வேடங்களில் சில சீன்களில் வந்துள்ள உதயநிதி, இந்த படத்தின்மூலம் முழுநேர போலீஸ் ஆபிசராக நடித்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X