ரஜினி சொன்ன சூப்பர் அட்வைஸ்… சசிக்குமார் தந்த செம தகவல் !
சென்னை : நடிகர் சசிக்குமார் நடிக்கும், ராஜவம்சம் திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
ராஜவம்சம் படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,யோகி பாபு, சதிஷ், தம்பி ராமையா, விஜயகுமார்,மனோ பாலா, சாம்ஸ், ரேகா என கிட்டத்தட்ட 40 நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை கே.வி. கதிர்வேல் இயக்க, டி.டி ராஜா மற்றும் டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரித்து உள்ளனர். சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு சாம் சிஎஸ் . இசை அமைத்துள்ளார்.

சசிக்குமார் பேச்சு
இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சசிக்குமார், இந்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர்தான் மிகவும் சிரமப்பட்டார். ராஜவம்சம் ஒரு கூட்டுக்குடும்பக் கதை என்பதால் உடனே ஒகே சொல்லிட்டேன், நானும் கூட்டுக்குடும்பம் தான் கூட்டுக்குடும்பத்தில் தான் வாழ்ந்துட்டு இருக்கேன். இதனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது என்றார்.

குடும்ப திரைப்படம்
தொடர்ந்து பேசிய சசிக்குமார், இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கும். ஒரே குடும்பமாக கலகலப்பாக படப்பிடிப்பு நடந்தது என்றார். கேமராமேன் சித்தார்த் நிக்கியை மட்டும் அழகாக காட்டல ஒவ்வொரு நடிகரையும் அழகாக காட்டி உள்ளார்.

நிக்கி சூப்பர் நடிப்பு
நிக்கி இந்த படத்தில் ரொம்ப அழகாக நடிச்சி இருக்காங்க, க்ளைமாக்ஸ் காட்சியில நாங்க 20 பேரும் சும்மா இருப்போம், நிக்கி மட்டுமே பேசுற மாதிரி ஒரு காட்சி அதில் சிறப்பா நடித்து இருந்தாங்க என்று கூறினார்.
ரஜினி சொன்ன அட்வைஸ்
ராஜவம்சம் திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி.டி.ராஜா தான், அவர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு படத்தை வெளியிட உள்ளார். படம் ரிலீஸ்ஆகுற வரைக்கும் அந்த டேன்ஷன் இருக்கும் என்றார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்குச் சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமையும் வேண்டும் என்று சசிக்குமார் பேசினார்.


Click it and Unblock the Notifications











