twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜாவுக்கு செக்: அப்பான்னா சேரப்பாதான் என்கிறார் வசந்தபாலன்

    |

    Recommended Video

    ASURAN DHANUSH பல் இடைவெளி | DIRECTOR CHERAN SPEECH | RAJAVUKKU CHECK AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL

    சென்னை: எனக்கு தெரிஞ்சி ஒரு மிகப்பெரிய அப்பா சேரன் தான். பிக் பாஸ்ல எல்லோருமே அவரை சேரப்பான்னு கூப்பிட்டாங்க. அங்க எல்லோரும் அப்படி கூப்பிட்டாலும் கூட, உண்மையிலேயே அப்பா கேரக்டர் பண்றதுக்கு அவரை விட்டால் வேற ஆளே கிடையாது என்று ராஜாவுக்கு செக் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்தார். இந்த படத்துல அப்படி வாழ்ந்திருக்காரு என்றும் பாராட்டியுள்ளார் வசந்தபாலன்

    அப்பா மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ராஜாவுக்கு செக். இப்படத்தில் இயக்குநர் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன் மற்றும் நந்தனா வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். சிருஷ்டி டாங்கே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    Rajavukku Check Audio and Trailer release-Vasanthabalan speech

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் சேரன் நடிக்கும் படமாகும். இப்படத்தை இயக்கியவர் சாய்ராஜ்குமார். இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அதோடு, ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த மழை படத்தை இயக்கியவர். மேலும், சுண்டாட்டம், பட்டாளம் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ள இர்ஃபான், இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

    நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்!நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்!

    ராஜாவுக்கு செக் படத்திற்கு இசையமைத்திருப்பவர் வினோத் யஜமானியா. இவர் இப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, படத்தொகுப்பு பணியை மேற்கொள்வது பிரேம். இத்திரைப்படம் முழுக்க எமோஷனல் ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளவர் டேஞ்சர் மணி.

    இப்படத்தின் இசை வெளியீடு, ட்ரெய்லர் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன், இயக்குநர் வசந்த பாலன் உள்ளிட்ட முக்கிய சினிமா உலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    இதில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், ஒரு அப்பா எப்போது அப்பாவா ஃபீல் பண்றார்னா, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டமாக இருக்கும். ஒரு சிலர் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது அப்பாவா ஃபீல் பண்ணுவாங்க. ஒரு சிலர் கையில் குழந்தையை கொடுத்த உடன் ஃபீல் பண்ணுவாங்க. இன்னும் ஒரு சிலர் அந்த குழந்தையை பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது அப்பாவா ஃபீல் பண்ணுவாங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காலகட்டம் இருக்கும்.

    என்னோட மனைவி கர்ப்பமா இருக்கும்போது நான் அப்பாவா ஃபீல் பண்ணலை. குழந்தை பிறந்தபோது கூட என்கிட்ட பெருசா காசு கிடையாது. ஆனால், குழந்தை பிறந்த உடனே நான் போய் பார்த்தேன். என்னோட ஒய்ஃப் என்னை பார்த்து, என்னங்க சந்தோசமா இல்லையான்னு கேட்டாங்க. அதுக்கு நான், இல்லை எனக்கு பொறுப்பு அதிகமாயிருச்சுன்னு சொன்னேன். என்னோட கடமைகள் ஜாஸ்தியாடிச்சோன்னு தோணுதுன்னு ஒய்ஃப் கிட்டே சொன்னேன்.

    அதை கேட்டு என்னோட ஒய்ஃப் அழுதுகிட்டே போய்டாங்க. நான் அப்பாவா ஆயிட்டேங்குற சந்தோசத்தை கூட வெளிப்படுத்த முடியாம இருந்தேன். ஏன்னா நான் இன்னும் அந்த மாதிரி ஃபீல் பண்ணலை. இப்படியே போய்க்கிட்டிருக்கும்போது, நான் என்னைக்கு அப்பாவா ஃபீல் பண்ணேன்னா, சென்னைக்கு வந்து செட்டிலானதுக்கு அப்புறமா, வெயில் படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறமா, அங்காடித்தெரு படம் சூட்டிங் நடந்துகிட்டிருந்தது.

    அப்போ, என்னோட குழந்தைக்கு உடம்பு சரியில்லேன்னு சைல்டு ட்ரஸ்ட் ஆஸ்பிட்டல்ல இருந்து எனக்கு போன் வந்தது. ஒய்ஃப் அங்க ஹாஸ்பிடல்ல இருக்காங்க. நான் போய் குழந்தைய 105 டிகிரி காய்ச்சலோட கையில தூக்கி வச்சிகிட்டு மூணு மணி நேரம் நின்னுகிட்டு இருந்தேன்.

    அப்போ பக்கத்துல யாருமே இல்லாத மாதிரியும், நானும் என்னோட மனைவியும் மட்டுமே இருக்கோம், ஆனால், என்னமோ தெரியலை, அப்போதான் எனக்கு ஒரு உன்னதமான ஃபிலிங் இருந்தது. அப்பாதான் பாதுகாப்பு, நான் தான் எல்லாமேன்னு ஒரு உணர்வு எனக்கு இருந்தது. அப்படிப்பட்ட அப்பாங்கிறதை ஃபீல் பண்றதுக்கு எனக்கு அவ்வளவு நாள் ஆனது.

    ஆனா, எல்லாருமே அப்படி கிடையாது. ஒவ்வொருத்தருமே ஒவ்வொரு காலகட்டத்திலே அப்பாவா ஃபில் பண்ணி இருப்பாங்க. எனக்கு தெரிஞ்சி ஒரு மிகப்பெரிய அப்பா சேரன் தான். பிக் பாஸ்ல எல்லோருமே அவரை சேரப்பான்னு கூப்பிட்டாங்க. அங்க எல்லோரும் அப்படி கூப்பிட்டாலும் கூட, உண்மையிலேயே அப்பா கேரக்டர் பண்றதுக்கு அவரை விட்டால் வேற ஆளே கிடையாது. இந்த படத்துல அப்படி வாழ்ந்திருக்காரு.

    சேரன், ராஜாவுக்கு செக் படத்துல, அப்பா கேரக்டர் பண்ணியிருக்காரு. ஆனால், இந்த ராஜாவுக்கு நம்ம யாருமே செக் வைக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான மனுஷன். தன்னுடைய உண்மையான வாழ்க்கையிலேயும், தன்னோட உண்மையான மகளோட வாழ்க்கையிலேயும், பிரச்சனைகள் வந்தபோதும், மீடியாவை கூப்பிட்டு வச்சி பேசுன விதமும், தன்னுடைய மகளுக்காக ஊடகங்கள் அன்பை வெளிப்படுத்தின விதமும், நம்ம யாருமே மறக்க மாட்டோம் என்று நெகிழ்ச்சியோடு பேசினார்.

    English summary
    Speaking at the launch of the music and trailer of 'Rajavukku Check', Director Vasanthabalan is a great dad Cheran. Everyone at Big Boss's house calls him, Cherapan. Even if everyone calls it that, there is no other person who can truly leave him. Speaking of this, he said that the king had not lived like that.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X