twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்

    |

    சென்னை: ராஜாவுக்கு செக் திரைப்படத்தின் இசை மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சரண், சேரனின் வித்தியாசமான ஆழமான கதைக்களம் மூலம் அவருக்கு மக்கள் மனதில் ஒரு தனிப்பட்ட அடையாளம் கிடைத்தது. நான் என்னுடைய ஸ்டைலில் படம் எடுத்ததால் பெரிதாக குழப்பம் ஏற்படவில்லை. அதற்கு பிறகு நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களானோம். இருப்பினும் எனது படங்கள் குறித்த மக்களின் விமர்சன கடிதங்கள் எல்லாம் சேரன் அவர்களுக்கு போகும். அவருக்கு போகவேண்டிய பாராட்டு கடிதங்கள் எல்லாம் எனக்கு வரும் என்று மிகவும் நெகிழ்ச்சியோடு கூறினார்.

    சாய் ராஜ்குமார் இயக்கத்தில் உருவான ராஜாவுக்கு செக் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த இரண்டு நாட்களக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த விழாவில் முக்கியமான சினிமா பிரபலங்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களும் கலந்து கொண்டனர்.

    Rajavukku Check Audio Trailer Release-Saran Speech

    இவ்விழாவிற்கு வந்திருந்த பிரபலங்களில் ஒருவர் காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சரண். அவர் இந்த விழாவில் பேசிய போது, இயக்குநர் மற்றும் அவரது நெருங்கிய நண்பருமான சேரனைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்தார்.

    அப்போது அவர் கூறுகையில், சேரனும் நானும் துணை இயக்குநராக இருக்கும் போதிலிருந்தே பழக்கம். ஆனாலும் பெரிதாக பேசிக்கொண்டது கிடையாது, இருந்தாலும் நல்ல அறிமுகம் உண்டு. அப்போது ஒரு நாள் கே.பாலசந்தரின் இல்லத்தில் நான் சேரனை சந்தித்தேன். அவர் கையில் ஒரு அழைப்பிதழை வைத்திருந்தார். அது அவர் இயக்கிய முதல் படத்திற்கான அழைப்பு. அது வரையில் அவருடைய பெயர் பற்றிய அறிமுகம் கிடையாது என்பதால் அதில் அவரின் பெயர் சேரன் என்று பார்த்தவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

    ஏனென்றால் நானும் சரண் என்று நான் இயக்கிய படம் மூலம் அறிமுகமாகவிருக்கிற போது, சேரன் என மற்றுமொரு இயக்குநர் அறிமுகமானால் பெயர் அடையாள குழப்பங்கள் ஏற்படுமே என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அவரின் வித்தியாசமான ஆழமான கதைக்களம் மூலம் அவருக்கு மக்கள் மனதில் ஒரு தனிப்பட்ட அடையாளம் கிடைத்தது.

    நான் என்னுடைய ஸ்டைலில் படம் எடுத்ததால் பெரிதாக குழப்பம் ஏற்படவில்லை. அதற்கு பிறகு நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களானோம். நம் உயிர் நண்பர் தனது கடின உழைப்பால் திறமையால் பெரும் வெற்றியடையும் போது அதை பார்த்து பூரிப்படையும் நண்பர் போல் தான் நான் அவரை பார்த்து மகிழ்ந்தேன். இருப்பினும் எனது படங்கள் குறித்த மக்களின் விமர்சன கடிதங்கள் எல்லாம் சேரன் அவர்களுக்கு போகும். அவருக்கு போகவேண்டிய பாராட்டு கடிதங்கள் எல்லாம் எனக்கு வரும் என்று மிகவும் நெகிழ்ச்சியோடு கூறினார்.

    மேலும் இயக்குனர் சேரன் சமீபத்தில் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரப்பா என்று அழைக்கப்பட்டார். அதே போல் இந்த ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் அவரின் நிஜ வாழ்க்கையில் அவர் எப்படி இருக்கிறாரோ அது போலவே இந்த படத்திலும் ஒரு சிறப்பான தந்தையாக இருந்துள்ளார். சரியான தருணத்தில் இப்படம் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் இப்படம் நிச்சயம் வெற்றியடையும். அதற்கு இந்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார் இயக்குனர் சரண்.

    பெயரில் குழப்பம் இருந்தாலும் அவரவருக்கு என்று தனி ஸ்டைல் உண்டு. அதனால் தமிழ் ரசிகர்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது. சரண் மற்றும் சேரன் இருவருமே தேர்ந்த திறமையான இயக்குநர்களே என்பதற்கு மக்களே சாட்சி.

    English summary
    Speaking at the music and song launch of 'Rajavukku Check', director Saran has made a unique mark in the minds of the people through Cheran's strangely deep storyline. I was not greatly disturbed by the image in my style, he said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X