ராஜீவ் மேனன் இயக்கத்தில் 'சர்வம் தாளமயம்' - மருமகனுக்கு இசையமைக்கும் இசைப்புயல்!
சென்னை : ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'சர்வம் தாளமயம்' படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டரில் ஜி.வி.பிரகாஷ் வாத்தியக் கருவியுடன் அந்தரத்தில் பறக்கிறார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் இசைக் கலைஞராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது 'அடங்காதே', '4ஜி', 'ஐங்கரன்', 'குப்பத்து ராஜா', '100% காதல்', 'நாச்சியார்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 'சர்வம் தாளமயம்' படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ராஜீவ் மேனன் படம்
'மின்சாரக் கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ரவி யாதவ் பணியாற்றுகிறார். ஆண்டனி எடிட்டராகப் பணியாற்றுகிறார். லதா இப்படத்தைத் தயாரிக்க இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்
இதில் ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக மிருதங்கம் உள்ளிட்ட வாத்தியக் கருவிகளில் பிரத்யேக பயிற்சி எடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வாத்தியக் கருவியுடன் அந்தரத்தில் பறக்கிறார் ஜி.வி.பி.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற விதத்தில் 9 பாடல்கள் உள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜி.வி.பிரகாஷ் மருமகன் என்றாலும் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.

ஹீரோயின்
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமானதாகச் சொல்லப்பட்டது. ஆனால், சாய் பல்லவிக்குப் பதிலாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.

நா.முத்துக்குமார்
இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நா.முத்துக்குமாரின் மறைவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே இயக்குநர் ஒரு பாடலை எழுது வாங்கிவிட்டாராம். இதுதான் அவர் எழுதிய கடைசி பாடல் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











