திருமணமான கையோடு பிரச்சனை?: கணவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்வதை நிறுத்திய நடிகை

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவுக்கும் அவரின் மனைவியும், நடிகையுமான சாரு அசோபாவுக்கும் இடையே பிரச்சனை என்று பேச்சு கிளம்பியுள்ளது.

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவுக்கும், டிவி நடிகை சாரு அசோபாவுக்கும் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று பேசப்படுகிறது.

அந்த பேச்சு கிளம்ப ராஜீவ் சென்னும், அசோபாவும் தான் காரணம்.

 ராஜீவ் சென்

ராஜீவ் சென்

இன்ஸ்டாகிராமில் ராஜீவை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் சாரு அசோபா. மேலும் தனது ப்ரொபைல் புகைப்படத்தையும் மாற்றி தான் மட்டும் இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார். பதிலுக்கு ராஜீவும் தனது மனைவியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியதுடன் ப்ரொபைல் புகைப்படத்தில் தன் புகைப்படத்தை மட்டும் வைத்துள்ளார். திருமணமான கையோடு அவர்கள் இப்படி நடந்து கொண்டுள்ளதால் தான் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று பேசுகிறார்கள்.

அசோபா

மனைவி அசோபாவுடன் டெல்லிக்கு சென்ற ராஜீவ் சென் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற இடத்தில் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ராஜீவ் மற்றும் அசோபா ஆகியோருக்கு இடையே ஒன்று பிரச்சனையாக இருக்கலாம் இல்லை விளம்பரம் தேட இன்ஸ்டாகிராமில் இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுஷ்மிதா

சுஷ்மிதா

சுஷ்மிதா சென் தன்னை விட 15 வயது சிறியவரான மாடல் ரொஹ்மான் ஷாலை காதலித்து வருகிறார். அண்மையில் ரொஹ்மான் இன்ஸ்டாகிராமில் காட்டமாக போஸ்ட் போட்டிருந்தார். அதை பார்த்தவர்கள் அவருக்கும், சுஷ்மிதாவுக்கும் இடையே பிரச்சனை என்று நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

ரொஹ்மான்

ரொஹ்மான்

ரொஹ்மானும், சுஷ்மிதாவும் இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 43 வயதாகும் சுஷ்மிதா 24 வயதில் தாயானார். அதாவது ரினீ என்கிற பெண் குழந்தையை தத்தெடுத்து தாயானார். அதன் பிறகு அலிஷா என்கிற குழந்தையை தத்தெடுத்தார். குழந்தைகளை கவனிக்க வசதியாக அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது தன் மகள்கள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து கதை கேட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டப்படும் நடிகையாக உள்ளார் சுஷ்மிதா சென்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X