மன்னிப்பு கேட்ட ராஜேந்திர பிரசாத்.. MGR குறித்து சர்ச்சை கருத்து.. முடிவுக்கு வந்த பிரச்னை

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் அண்மையில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றார். அவருக்கு மறைந்த தெலுங்கு நடிகர் காந்தா ராவ் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், காந்தா ராவ் கத்தி சண்டை செய்வதைப் பார்த்து MGR பயந்து போனார். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக கத்தி சண்டை செய்வதில் கை தேர்ந்தவராக இருந்தார் என்று தெரிவித்துவிட்டார்.

மறைந்த நடிகர் காந்தா ராவின் புகழ் பாடுகிறேன் என்று மறைந்த நடிகரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான MGR குறித்து தெரிவித்த கருத்துக்கள் பலருக்கும் ஷாக் கொடுத்தது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கண்டனம் தெரிவித்தார். அதேபோல் விஷால் தனது எக்ஸ் தள பதிவில், நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஒரு நடிகரைப் புகழ்கிறேன் என்று மற்றொருவரை இகழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

Rajendra Prasad Apologises After Controversial Comment About M G Ramachandran at Award Event

இந்நிலையில் ராஜேந்திர பிரசாத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். அதாவது அந்த வீடியோவில், " நான் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கு ஒரு விழா நடைபெற்றது. அதில் மூத்த நடிகர் காந்தா ராவ் விருது எனக்கு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நான் பேசுகையில், தமிழ் சினிமாவின் கடவுளாக நான் பார்க்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் MGR குறித்து விளையாட்டாக சொன்ன கருத்து, தற்போது பல இடங்களில் அதை வேண்டும் என்றே பெரிதாக்கி விட்டார்கள்.

நான் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் MGR குறித்து அவதூறாக பேசுவேனா? அந்த அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? நான் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும் போது நாங்கள் எப்படி நடிப்பு கற்றுக் கொள்கிறோம் என்று பார்க்க வந்தார். அப்போது அவர்தான் முதலமைச்சர். அவரை தவறாக விமர்சிக்கும் இடத்தில் நான் இல்லை. ஆனாலும் என்னை அறியாமல் வந்த வார்த்தைகளால் நீங்கள் யாராவது புண்பட்டிருந்தால், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இனி வாழ்க்கையில் எப்போதுமே நான் இதுபோல பேச மாட்டேன். இந்த தவறை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள், இனிமேல் இதுபோல் நடக்காது என்று உறுதியாக கூறுகிறேன். இத்துடன் இந்த பிரச்னையை விட்டுவிடுங்கள்" என்று பேசி உள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: telugu actor tollywood mgr
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X