Don't Miss!
- News
ஜெயலலிதா சொத்துக்கு வந்த புது "பங்குதாரர்!" சென்னை உயர்நீதிமன்றத்தில் "அண்ணன்" மைசூர் வாசுதேவன் மனு
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த அம்மணியை உங்களுக்குத் தெரியுமாங்ணா...??
சென்னை: ஹாஹாஹாஹா... இந்தப் படத்தை உற்றுப் பார்த்ததும் உங்களது வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.
அப்படி ஒரு அசத்தல் கெட்டப்பில், கோலிவுட்டின் கிளியோபாட்வாராக காட்சி தரும் இந்த அழகி சாட்சாத் வில்லாதி வில்லன் ராஜேந்திரனேதான்.
பார்த்ததும் கண்டுபிடிப்பது கஷ்டம்தான். ஆனால் சற்று உற்றுப் பார்த்தால் இந்த ராஜிக்குள் ஒளிந்திருக்கும் ராஜேந்திரனைக் கண்டுபிடிக்க முடியும்.

திருடன் போலிஸ்
திருடன் போலீஸ் படத்தில்தான் இந்தக் கூத்துக்கார வேடத்தில் காட்சி தருகிறார் நம்ம ராஜி.

வடிவேலுக்கு அப்புறம்
எத்தனையா காமெடியன்கள் பெண் வேடமிட்டுள்ளனர். ஹீரோக்கள் பெண்களாக மாறியுள்ளனர். வில்லன்கள் கூட பெண் வேடமிட்டுக் கலக்கியுள்ளனர். ஆனால் வடிவேலுவுக்குப் பிறகு ராஜேந்திரனுக்குத்தான் இந்த அழகி கெட்டப் அசத்தலாக அமைந்துள்ளது.

சரத்குமார் படத்தில்
முன்பு சரத்குமார் நடித்த படம் ஒன்றில் வடிவேலு திருடுவதற்காக வீடு ஒன்றில் பெண் வேடமிட்டு கலக்குவார். கோவை சரளா, மணிவண்ணன் கும்பலிடம் சிக்கி படாதபாடு படுவார்.

அந்த வரிசையில்
தற்போது அதேபோல இந்தப் படத்தில் ராஜேந்திரனுக்கு பெண் வேடமிட்டு அதகளப்படுத்தியுள்ளது திருடன் போலீஸ் கோஷ்டி.

"பாட்டி" உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால்
அழகான இந்தப் பாட்டி கோலத்தில் ராஜேந்திரன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் ராஜேந்திரனுக்கு செமத்தியான கேரக்டர் கொடுத்திருப்பார்கள் போலத்தான் தெரிகிறது.

வழக்கமான பாஸ்..மொட்டை பாஸ்!
ஆனால் படத்தில் வில்லன் கோஷ்டியில்தான் ராஜேந்திரனும் வருகிறார். அதை அடுத்தடுத்த ஸ்டில்களில் காண முடிகிறது. ஸோ. இந்த பெண் வேடம், சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

காமெடி போலீஸ்.. காமெடித் திருடன்
அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி அடிப்படையிலானது என்பதால் ராஜேந்திரன் என்கிற ராஜியின் பங்கும் சற்று தூக்கலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தப் படத்திலும் "ஆரோமலே" பாட்டை ராஜேந்திரனை விட்டு பாட வச்சுடாதீங்கப்பா.. காது தாங்காது!