»   »  சந்தானத்தை இயக்கும் 'சரக்கு ஸ்பெஷலிஸ்ட்' ராஜேஷ்...!

சந்தானத்தை இயக்கும் 'சரக்கு ஸ்பெஷலிஸ்ட்' ராஜேஷ்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜேஷ் எம் படங்கள் என்றாலே அதில் ஹீரோவை விட காமெடியனுக்கு ஸ்கோப் அதிகம். பஞ்ச் டயலாக்குகள், கலாய்த்தல் என கொடி கட்டிப் பறப்பார் காமெடியன்.

சிவா மனசுல சக்தி படத்திலிருந்து வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க வரை, ராஜேஷின் 5 படங்களில் அந்த காமெடியன் பாத்திரத்தை கச்சிதமாக செய்து வந்தார் சந்தானம்.

Rajesh to direct Santhanam

ஆனால் ராஜேஷ் இயக்கத்தில் அண்மையில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் சந்தானம் இல்லை. படமும் பெரிதாகப் போகவில்லை.

இந்த நிலையில் சந்தானத்தை மெயின் ஹீரோ கம் காமெடியனாக வைத்து ஒரு கதையை உருவாக்கிய ராஜேஷ் அதை அண்மையில் சந்தானத்திடம் சொன்னாராம். கதை பிடித்துப் போனதால், உடனே தேதியைக் கொடுத்துவிட்டார் சந்தானம். தேனாண்டாள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

சந்தானம் - ராஜேஷ்... அப்புறம் சரக்கு காட்சிகளுக்கு பஞ்சமென்ன...!

English summary
Director Rajesh M is directing Santhanam again and Thenandal pictures producing the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil