52 வயதில் மீண்டும் தந்தையான பிரபல நடிகரின் அப்பா

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் இஷான் கட்டாரின் தந்தை மீண்டும் தந்தை ஆகியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தாய் நீலிமா ஆசிம் டிவி நடிகர் ராஜேஷ் கட்டாரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு பிறந்த பிள்ளை தான் நடிகர் இஷான் கட்டார். நீலிமாவை பிரிந்த ராஜேஷ் நடிகையும், தயாரிப்பாளருமான வந்தனா சஜ்னானியை திருமணம் செய்தார்.

Rajesh Khatter becomes dad again

வந்தனாவுக்கும், ராஜேஷுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்து. இந்நிலையில் வந்தனா தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 52 வயதில் ராஜேஷ் மீண்டும் தந்தை ஆகியுள்ளார்.

இது குறித்து ராஜேஷ் கூறியதாவது,

வந்தனா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகப் போகிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர் தெரிவித்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் மூன்றாவது மாதத்தில் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். சில மாதங்கள் கழித்து ஒரு குழந்தையின் வளர்ச்சி மிகவும் மெதுவாக உள்ளது என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த குழந்தையை இழந்துவிட்டோம்.

இதையடுத்து மற்றொரு குழந்தையை காப்பாற்ற உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எங்கள் மகன் 3 மாதங்களுக்கு முன்பே உலகத்திற்கு வந்துவிட்டார். வந்தனாவின் அறுவை சிகிச்சையிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் எங்கள் குழந்தை இரண்டரை மாதங்களாக தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டது.

தாயும், சேயும் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். எங்களின் கிருஷ்ணர் ஜன்மாஷ்டமி அன்று வீட்டிற்கு வந்துள்ளார். எங்கள் மகனை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சி. கடவுள் எங்களுக்கு அளித்த பரிசுகளிலேயே இது தான் மிகவும் அழகான பரிசு.

52 வயதில் தந்தையானது சவாலானது தான். ஆனால் 50 வயதில் எத்தனையோ பேர் தந்தையாகியுள்ளனர். நான் முதல் முறையாக தந்தை ஆன போது வாலிபராக இருந்தேன் என்று தெரிவித்துள்ளார் ராஜேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X