twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    க்ரைம் நாவல் உலகின் ராஜாதி ராஜா என்றைக்கும் ராஜேஷ்குமார் தான்

    |

    கோயம்புத்தூர்: க்ரைம் நாவல் உலகில் முடிசூடா மன்னனாக வலம்வரும் ராஜேஷ்குமார் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல்களை எழுதி வருகிறார். நாள்தோறும் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை பட்டை தீட்டிக்கொண்டு அதற்கேற்ப நாவல்களை படைத்து வருகிறார். தற்போது அவரும் டிஜிட்டல் உலகத்திற்குள் வந்து விட்டது, அவரின் தீவிர வாசகர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது. இதன் காரணமாகவே அவர் என்றைக்கும் நாவல் உலகில் ராஜாதி ராஜாவாக வலம் வருகிறார்.

    கோவையைச் சேர்ந்த ஒரு கதாசிரியரை தான் நாம் இன்று க்ரைம் த்ரில்லர்களின் ராஜா என்று கொண்டாடி வருகிறோம். ஆம் அவர் தான் 1200 க்ரைம் நாவல்கள், 2,000 சிறுகதைகள் மற்றும் அறிவியல் அல்லாத 300 புத்தகங்களை எழுதி தனெக்கென ஒரு தனி முத்திரையை எழுத்துலகில் பதிய வைத்தவர்.

    ராஜேஷ்குமாரின் 50 ஆண்டு கால எழுத்துலக பணியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஒரு பாராட்டு விழா சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த விழாவில் பல பிரபல எழுத்தாளர்களான கே.என்.சிவராமன், மனுஷ்யபுத்திரன், நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் மற்றும் அவரின் தீவிர வாசகர்கள் என பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

    ராஜேஷ்குமார் 50

    ராஜேஷ்குமார் 50

    50 வருடங்களாக எழுத தொடங்கிய முதல் நாளில் இருந்து இன்று வரை அவர் எழுத்து மூலம் ஏற்படுத்திய சாதனையை யாராலும் முறியடிக்கவே முடியாது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப வாசகர்களின் ரசனைக்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகளோடு அவர் எழுதும் அந்த தனித்துவம் தான் அவரது வெற்றியின் ரகசியம்.

    கிரைம் மன்னன்

    கிரைம் மன்னன்

    குறிப்பாக அவரின் க்ரைம் நாவல்களில் அவர் ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமும் அதற்கு அவர் பயன்படுத்தும் அறிவியல் மற்றும் விஞ்ஞானம் தொடர்பான வார்த்தைகளும் உண்மையிலேயே நாமும் அந்த கதைக்குள் ஒரு கதாபாத்திரமாகவே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது அவரால் மட்டுமே முடியும். வெறும் வார்த்தைகள் மூலம் எப்படி அவரால் அந்த உணர்வை கொண்டு வரமுடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.

    நந்தினி 440 வோல்ட்

    நந்தினி 440 வோல்ட்

    வாசகர்களின் பாராட்டுகளை மட்டுமே தனது பெருமையாக கருதும் ராஜேஷ்குமார், விருதுகள் எல்லாம் வெறும் குப்பை தான் என்பார். அவரின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமாக இருக்கும். ஒன்றோடு ஒன்று எந்த விதத்திலும் சாயல் தெரியாது. உதாரணமாக 1986ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எழுதி வெளியான முதல் க்ரைம் நாவலான ‘நந்தினி 440 வோல்ட்' நாவலுக்கும் சமீபத்தில் வெளியான க்ரைம் நாவலுக்கும் ஒரு சதவிகிதம் கூட சம்பந்தம் இருக்காது. இதன் காரணமாகவே, உலகம் முழுவதும் அவருக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். இன்று ஆன்லைன் மூலம் நாம் எதை வேண்டுமென்றாலும் படித்து கொள்ளலாம்.

    கிரைம் நாவல்

    கிரைம் நாவல்

    இருப்பினும் ராஜேஷ்குமாரின் நாவல்களை கடைகளில் தேடி அதை புத்தகமாக படிப்பதை ஆர்வமாக கொண்டுள்ளவர்கள் பலர். அவரது அனைத்து நாவல்களும் வாசகர்களால் இன்றும் பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் அவரின் எழுத்தாளுமை தான். கொங்கு நாட்டில் பிறந்தவரானாலும் அனைத்து வெகுஜன மக்களையும் கவரும் வகையில் இருக்கும் அவரது நாவல்கள்.

    சினிமாவில் ராஜேஷ்குமார்

    சினிமாவில் ராஜேஷ்குமார்

    அரசியல், சினிமா, பிரபலங்கள் என பலர் ராஜேஷ் குமாரின் நாவல்களில் ஈர்க்கப்பட்டவர்கள். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த்தை கதைக் கருவாக வைத்து ரஜினி ராஜ்யம் என்ற தலைப்பில் தொடர் கதை ஒன்றை எழுதினார். அதில் ரஜினியை ஒரு க்ரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் ஆபீஸராக சித்தரித்து அவர் தமிழ்நாட்டில் நடைபெற்ற சில குற்றங்களை தனது இன்டலிஜென்ட்டான பாணியில், எப்படி இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் என்பது பற்றின கதை. இது சம்பந்தமாக அவர் ரஜினிகாந்த்தை சந்தித்து அவரின் சம்மதம் பெற்றார்.

    எழுத்தாளுமை

    எழுத்தாளுமை

    அது மட்டுமல்ல எத்தனையோ குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் தவித்த காவல்துறை அதிகாரிகள் அவரிடம் வந்து ஆலோசனை பெற்று குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர் என்றால் அவரின் எழுத்தாளுமை எப்படிப்பட்டது என்று தெரிந்துகொள்ளலாம்.

    சூப்பர் ஸ்டார்

    சூப்பர் ஸ்டார்

    சூப்பர் ஸ்டார் சந்திப்பு ஒரு புறம் என்றால் உலக நாயகனின் சந்திப்பு மறுபக்கம். கமல்ஹாசன் ஒரு நாத்திகர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவரது படங்களின் தலைப்புகள் மட்டும் கடவுளின் பெயராக இருப்பது ஆச்சரியமளித்ததால், கமல்ஹாசனிடமே அந்த சந்தேகத்திற்கான பதிலை கேட்டறிந்தார் ராஜேஷ் குமார். அது கமல்ஹாசனின் உத்திகளில் ஒன்று என்பது அப்போது தான் புரிந்தது. இப்படி பல பிரபலங்களுடன் பல சுவாரசியமான சந்திப்புகள் அவரது வாழ்வில் நிகழ்ந்துள்ளன.

    பாராட்டு விழா

    பாராட்டு விழா

    ராஜேஷ்குமாரின் 50 ஆண்டு கால எழுத்துலக பணியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஒரு பாராட்டு விழா சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த விழாவில் பல பிரபல எழுத்தாளர்களான கே.என்.சிவராமன், மனுஷ்யபுத்திரன், நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் மற்றும் அவரின் தீவிர வாசகர்கள் என பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

    ஆவலைத்தூண்டும் கதை

    ஆவலைத்தூண்டும் கதை

    புத்தகம் படிப்பது என்பது இன்று கிட்டத்தட்ட அனைவரும் மறந்த ஒரு செயல். ஆனால் ராஜேஷ்குமாரின் ஒரு புத்தகத்தை ஒரு முறை படித்தால் நாம் மீண்டும் மீண்டும் அவரது புத்தகங்களை தேடி கண்டுபிடித்து படிக்கும் அளவிற்கு நமது ஆவலைத் தூண்டும் அவரது நாவல்கள்.

    நாவல்களுக்கு மரியாதை

    நாவல்களுக்கு மரியாதை

    இந்த 50 ஆண்டுகளில் அனைத்து விதமான வாசகர்களையும் அவர் அடைந்து விட்டார் என்றால் அது மிகையல்ல. இதையே அவர் வாழ்வின் மிக பெரிய விருதாக கருதுகிறார். அவரின் நாவல்களுக்கு அடிமைகளாக இருக்கும் பிறருக்கு ஒரு அற்புதமான ஒரு செய்தி என்னவென்றால் இப்போது ராஜேஷ்குமாரும் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைந்து விட்டார். அவர் தற்சமயம் தமிழ் ஒன் இந்தியா மற்றும் ஃபில்மி பீட் இணையதளத்திற்காகவும் அவர் எழுதி வருகிறார்.

    டிஜிட்டல் நாயகன்

    டிஜிட்டல் நாயகன்

    அவர் டிஜிட்டல் உலகிற்குள் வந்தது அவரது வாசகர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது. ஒரு மாபெரும் எழுத்தாளன், அவரின் புத்தகத்தை வாங்கி படிக்க முடியாதவர்கள் கூட ஒன் இந்தியா மற்றும் ஃபில்மிபீட் மூலம் அவரது நாவல்களை படிக்கலாம். எழுத்துலகத்தில் ராஜேஷ்குமார் என்றுமே ராஜாதி ராஜா தான்.

    English summary
    Rajesh Kumar has been writing for more than 50 years continuously becoming the king of crime fiction. He is constantly striving to adapt to ever-changing technological development and to create novels accordingly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X