வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க (விஎஸ்ஓபி).. இது ஆர்யா - ராஜேஷ் படத்தின் தலைப்பு
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா என வித்தியாச - சற்று நீண்ட - தலைப்புகள் வைப்பது இயக்குநர் ராஜேஷின் பாணி.
அந்த வகையில் தன் அடுத்த படத்துக்கு 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' என்று தலைப்பு வைத்துள்ளனர். சுருக்கமாக விஎஸ்ஓபி. தலைப்பிலேயே ஏகத்துக்கும் டாஸ்மாக் வாடை அடிக்குதில்லே!
இந்தப் படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க, தமன்னா ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திலும் சந்தானம்தான் பிரதான காமெடியன் கம் இரண்டாவது நாயகன் (வாசு + சிவா).

ஆர்யாவின் ஷோ பீப்பிள் நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது.
'தாமிரபரணி' படத்தில் கதாநாயகியாக நடித்த பானு இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வெண்ணிற ஆடை முர்த்தி, ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யு லேகா, மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
நீரவ் ஷா ஒளிபதிவு செய்ய, ஜாக்கி கலை வண்ணத்தில், இமான் இசை அமைக்க உள்ள இந்த படம் சென்னையில் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.
படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், 'இந்த படம் வெறுமனே சிரித்து விட்டு போகக் கூடிய படமாக இருக்காது. சிந்திக்க மற்றும் சிரிக்க வைக்கும் கதையின் கரு, கண் கவரும் நேர்த்தியான ஒளிபதிவு மற்றும் செவிக்கினிய இசை என்று படத்தின் வெற்றிக்கு தேவையான அதனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.
ஆர்யா- சந்தானம்- மற்றும் என்னுடைய கூட்டணியில் வெளி வந்த எங்களது முந்தைய படமான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் வெற்றியையும் தரத்தையும் இந்த படத்திலும் தருவோம்', என்றார் நம்பிக்கையுடன். வெல்கம் பேக்!


Click it and Unblock the Notifications











