சாரா அர்ஜுனுக்கு ஏன் அந்த இடத்தில் முத்தம் கொடுத்தேன்.. சீனியர் நடிகர் கொடுத்த விளக்கம்..
மும்பை: பாலிவுட் சீனியர் நடிகர் ராகேஷ் பேடி, 'துரந்தர்' திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டில் இளம் நடிகை சாரா அர்ஜுனை முத்தமிட்டது போல் காட்சியளித்த வீடியோவுக்கு எழுந்த இணைய விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். இக்குற்றச்சாட்டுகளை 'முட்டாள்தனம்' என அவர் நிராகரித்தார்; தகாத நடத்தையல்ல, அவர் மீதான பாசத்தின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டார்.
ஆதித்யா தார் இயக்கிய 'துரந்தர்' படத்தில் ராகேஷ் அரசியல்வாதி ஜமீல் ஜமாலியாகவும், சாரா அர்ஜுன் அவரது மகள் யாலினாவாகவும் நடித்துள்ளனர். ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், இந்தியவாவில் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 400 கோடியைத் தாண்டி பெருமளவில் வசூலித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸின் போது மேடைடில் ராகேஷ் பேடி, நடிகை சாரா அர்ஜுனுக்கு அவரது தோள் பட்டையில் முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனால் இணையவாசிகள் பலரும் ராகேஷ் பேடியை மோசமாக விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார்,

ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பேசிய ராகேஷ், நிகழ்ந்த சம்பவம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறினார். படப்பிடிப்பில் தனக்கும் சாராவுக்கும் நெருக்கமான பிணைப்பு உருவானது. "சரா பாதி என் வயது, மகள் ரோலில் நடிக்கிறார். மகள் தந்தையை அணைப்பதைப் போல, அவர் என்னை அன்புடன் அணைப்பார். திரையிலும் பிரதிபலிக்கும் நல்லுறவு எங்களுக்கிடையே நிஜத்திலும் உள்ளது," எனத் தெரிவித்தார்.
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடந்தது, வழக்கமான வாழ்த்து முறையிலிருந்து மாறானதல்ல என்றார் ராகேஷ். "அங்கே உள்ள பாசத்தைப் மக்கள் பார்க்கவில்லை. பார்க்கும் நபரின் கண்ணில் தவறு இருந்தால் என்ன செய்ய முடியும்?" என கேள்வி எழுப்பினார். குடும்பத்தினர் முன்னிலையில், பொது மேடையில் தான் ஏன் தவறாக நடக்க வேண்டும் எனவும் அவர் பதில் கேள்வி எழுப்பியது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
"நான் ஏன் தவறான எண்ணத்துடன் பொது மேடையில் முத்தமிட வேண்டும்? அவளது பெற்றோர்கள் அங்கிருந்தனர். மக்கள் எதில் இருந்தும் சமூக வலைத்தளங்களில் பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்" என்று நடிகர் காட்டமாகத் தெரிவித்தார். 71 வயதான ராகேஷ், இச்சம்பவத்துக்கு எந்த விளக்கமும் தேவையில்லை என்றார்.
சமீபத்திய விருந்தில், ஒரு பெண்மணி என்னைப் பேச அணுகினார். அவரது மகன் உடல், மனநல சவால்கள் கொண்டிருந்தாலும், என் நடிப்பை விரும்பி ரசிப்பதாகவும், புரிந்துகொள்வதாகவும் தெரிவித்தார். இது எதையும் விட எனக்குப் பெருமை சேர்க்கிறது," என ராகேஷ் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். ராகேஷ் பேடி - சாரா அர்ஜுன் 'துரந்தர்' வீடியோ குறித்த இணைய விவாதம் தீவிரமாக உள்ளது. இணையவாசிகள் இரு தரப்பில் இருந்தும் பேசுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











