Bigg Boss 3 Tamil: பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யா வசிக்க.. வெளியில் தம்பி ராஜேஷ் வைத்யா வாசிக்க!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டில் மோகன் வைத்யாவும் ஒரு போட்டியாளராக களம் இறக்கப்பட்டு இருக்கிறார். இவர் கர்நாடக இசைப் பாடகர். குடும்பமே சங்கீதத்தில் ஊறிய குடும்பம்.
நோக்கம் வைத்யாவின் தம்பி மேஸ்ட்ரோ கலைமாமணி ராஜேஷ் வைத்யா ஒரு வீணை கலைஞர். நேற்று சவேரா ஹோட்டலில் '60 நிமிடங்களில் 60 பாடல்களுக்கான சின்ன சின்ன பிட்களை ' வாசித்து சாதனை படைத்திருக்கிறார். ராஜேஷ் வைத்யா வீணையில் இசைத்த பாடல்கள் அத்தனையும் தென்றல் வந்து தீண்டும்போது போன்ற இனிமையான சினிமா பாடல்கள் என்பதுதான் ஹைலைட்!
அதாவது, புதிய 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனையை வீணை மேஸ்ட்ரோ கலைமாமணி ராஜேஷ் வைத்யா, தனது குழுவினருடன் சேர்ந்து படைத்து இருக்கிறார். கர்நாடக சங்கீத ரசிகர்களின் சாதனையை நேரில் கண்டு பரவசம் அடைந்துள்ளனர்.

உயர்த்தும் இணைய தளம்
ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' எனும் இந்த இணைய தளம், ஆசிய நாடுகளின் தேசிய சாதனைகள் செய்தவர்களை மட்டும், அவர்கள் தற்போது இருக்கும் நிலையை விட அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் உன்னத சேவையை செய்து வருகிறது. ஏற்கனவே சாதித்த சாதனையாளர்களை அடுத்த நிலைக்கு அதாவது ஆசிய அளவில் சாதனையாளராக ஆக்கும் முயற்சியில் இந்த தளம் உருவானது.

தங்களை ஒப்பிட்டு
இந்த இணைய தளம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வியட்நாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இண்டோ-சீனா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லாவோஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், மற்றும் நேபால் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய தளங்களின் தேசிய சாதனையாளர்கள், தங்களை ஒப்பிட்டு, போட்டியிட்டு, ‘ஆசிய சாதனையாளர்' அந்தஸ்துக்கு தங்களை உயர்த்தி கொள்வதற்கு ஒரு நல்ல அடித்தளமாக அமைந்திருக்கிறது.

இந்த தளத்தில் நாற்பதாயிரம்
இந்த இணைய தளத்தில் சுமார் 40,000 சாதனையாளர்கள் உள்ளனர் என்பது பிரமிக்கத் தக்க ஒரு விஷயம். இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனம், சாதனையாளர்களின் சாதனைகளை பதிவு செய்வதற்கு பல சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது

சகோதரர்களால் பெருமை
கலைமாமணி ராஜேஷ் வைத்யா வென்றுள்ள பட்டம் ‘ஒரு மணி நேரத்தில் அதிக பாடல் பிட்களை வீணையில் வாசித்தவர்' என்பதாகும். அண்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டு இருக்கும் இதே நேரம் வெளியில் அவரது தம்பி ராஜேஷ் வைத்யா இசையின் மூலம் ஆசிய அளவில் புகழ் அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











