வீணை மூலம் 100 நொடிகளில் 100 பாடல்.. ராஜேஷ் வைத்தியாவின் கின்னஸ் முயற்சி !

சென்னை : வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியா கின்னஸ் ரெக்கார்ட்ல் இடம் பெற பு‌திய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியா சினிமா ரசிகர்களை தாண்டி மேடை இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்.

இவர் தென்னிந்திய சினிமாக்களில் பல மொழிகளில் பல படங்களில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார். இவர் சிறந்த வீணை கலைஞர் என்று பலரால் பாராட்டபட்டவர்.

 வீணை மீட்டும் வைத்தியா

வீணை மீட்டும் வைத்தியா

ராஜேஷ் வைத்தியா பல தமிழ் முன்னணி இசையமைப்பாளர் படங்களில் பணிபுரிந்தவர். இவர் சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடதக்கது. இவரது அண்ணனான மோகன் வைத்தியா இந்த பிக் பாஸ் சீசனின் பங்கேற்பாளர் என்பது கூடுதல் சிறப்பு .

 கலைமாமணி

கலைமாமணி

ராஜேஷ் வைத்தியாவின் இசை ஞானத்தையும் அவர் கலை பணியையும் பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியிருக்கிறது. இவர் 2018ல் 60 நொடிகளில் 60 பாடல்களின் இசையை வீணையில் வாசித்து ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து தற்போது இவரின் சாதனையை இவரே முறியடிக்க தயாராகி இருக்கிறார்.

 100 பாடல்கள்

100 பாடல்கள்

தற்போது மார்ச் 21ல் இவர் 100 நொடிகளில் 100 பாடல்களை வீணையின் மூலமும் தனது இசைகுழுவுடனும் வாசிக்க உள்ளதாக கூறியிருக்கிறார். இது கின்னஸ் சாதனைக்கானது என்று குறிப்பிட்டு உள்ளார். கட்டாயம் கின்னஸை இந்த சாதனை மூலம் வெல்வோம் என்று உறுதியளித்து உள்ளார். தற்போது இசையமைப்பாளர்கள் அனைவரும் அதிகபடியான எலக்ட்ரானிக் இசை கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

Recommended Video

Master song| Vaathi Coming |review| Vijay
 வீணை இசை

வீணை இசை

படங்களில் வரும் பாடல்களில் வீணை போன்ற பழைய இசைகருவிகளின் பயன்பாடுகள் குறைந்து வருவதாக ராஜேஷ் வைத்தியா வருத்தம் தெரிவித்துள்ளார். ராஜேஷ் வைத்தியா தனது இசைக்குழுவுடன் பல சாதனைகளை புரிந்தவர் பல சாதனைகளை தனியாகவும் நிகழ்த்தி காட்டியிருக்கிறார். இவரை புகழாத தமிழ் சினிமா பிரபலமே கிடையாது என்று சொல்லலாம். தற்போது கின்னஸ் சாதனை பயணத்திற்காக பலரும் இவரை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X