லியோ பஞ்சாயத்து.. விஜய்க்கு காதும் கேட்காது.. மரியாதையும் தெரியாது.. பரபரப்பு கிளப்பிய ராஜேஸ்வரி

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) விஜய்க்கு காதும் கேட்கவில்லை மரியாதையும் தெரியவில்லை என ராஜேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.

லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. விஜய் படம் என்றாலே அந்தப் படத்தோடு சேர்ந்து சர்ச்சையும் உருவாகும். அப்படித்தான் லியோவுக்கும் நடந்திருக்கிறது. நா ரெடிதான் பாடலில் ஆரம்பித்த சர்ச்சையும், எதிர்ப்பும் கடைசியாக வெளியான லியோ படத்தின் ட்ரெய்லர்வரை இருக்கிறது. விஜய்க்கு பொறுப்பே இல்லை; ரசிகர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக இருக்கிறார் என்று பலரும் கூறுகின்றனர்.

Rajeshwari Criticized Vijay For Leo trailer Bad Word Issue

ராஜேஸ்வரி பேட்டி: இந்நிலையில் லியோ படத்தின் நா ரெடிதான் பாடல், ட்ரெய்லர் உள்ளிட்டவைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் ராஜேஸ்வரி தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விஜய்யை கடுமையாக தாக்கியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "லியோ படத்தின் மீது எனக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை. சிறுவர்கள் அதிகம் பேரை ரசிகர்களாக கொண்ட ஒரு நடிகர் சமூக சிந்தனை இல்லாமல் இப்படி செய்யலாமா என்பதுதான் என் ஆத்திரம்.

தேவையில்லை: ஆபாச வார்த்தையை, பெண்களை இழிவுப்படுத்தும் அதிலும் தாயை கொச்சைப்படுத்தும் வார்த்தையை பயன்படுத்துவதை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டார். அதை நான் எதிரொலிக்கிறேன். எனக்கு தெரிந்து சென்சார் சம்மந்தப்பட்ட வார்த்தையை மியூட் செய்துவிடும். படத்தில் அது வராது. மீறி வந்தால் சென்சாருக்கு மீண்டும் கோரிக்கை வைப்பேன். அந்த வார்த்தையெல்லாம் தேவையில்லாத ஒன்று. அது விஜய் வாயிலிருந்து வந்தால் பலர் அந்த வார்த்தையை பேசுவார்கள்.

குடிப்பது குற்றம்: அந்தக் காலத்தில் குடிப்பது குற்றமாக இருந்தது. முக்காடு போட்டு குடித்த காலம் மலையேறி குடிக்காதவன் இப்போது முக்காடு போடும் காலம் வந்திருக்கிறது. அதற்கு காரணம் சமூகம்தான். வீட்டின் மேஜையில் மது பாட்டிலை வைக்கும் அளவுக்கு மாறிவிட்டது. அனைத்தையும் இப்படி சகஜமாக மாற்ற முடியாது அல்லவா?..

உடைந்து போவார்கள்: லியோவில் விஜய் பேசியிருக்கும் அந்த வார்த்தையை கேட்டால் எந்தப் பெண்ணும் உடைந்துபோவார். அதை விஜய் ஏன் செய்யவேண்டும் என்பதுதான் எனது ஆதங்கம். ஏதோ விஜய்யை மட்டும் நான் குறி வைத்து தாக்கவில்லை. இதற்கு முன்பு நிறைய எதிர்ப்புகளை பல படங்களுக்கு நான் செய்திருக்கிறேன்.

காது கேட்காது யார் என்ன சொன்னாலும் எனது காது கேட்காது என்று போகும் விஜய்யை குறை சொல்ல முடியாமல் இருக்க முடியுமா?.. எனது ரசிகர்கள் எந்தப் பெண்ணையும் இழிவாக பேசக்கூடாது என்று விஜய் கூற முடியாதா. நான் புகார் அளித்தும் அது குறித்து அமைதியாக இருக்கிறார் என்றால். அவர் விஜய் மரியாதை தெரியாதவர் என்றுதான் நான் சொல்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X