Leo Trailer - திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்.. லியோ ட்ரெய்லரால் விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதால் அவர் திருந்தாத ஜென்மம் என ராஜேஸ்வரி ப்ரியா தெரிவித்திருக்கிறார்.

லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜும், விஜய்யும் ஏற்கனவே இணைந்து மாஸ்டர் என்ற பிரமாண்ட ஹிட்டை கொடுத்ததால் இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Rajeshwari Priya Criticized Vijay And Leo Trailer

ட்ரெய்லர்: ரொம்பவே எதிர்பார்த்த லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்ட சூழலில் படத்திலிருந்து போஸ்டர்கள், இரண்டாவது சிங்கிள் வெளியானது. அவைகளுக்கு ரசிகர்கள் பக்கா ரெஸ்பான்ஸை கொடுத்தனர். இந்த சூழலில் லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

செம ரெஸ்பான்ஸ் ட்ரெய்லர்: அதன்படி இன்று சன் டிவி யூட்யூப் சேனலில் லியோ ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று ரசிகர்கள் ரொம்பவே நம்பியிருக்கின்றனர். அதற்கேற்றபடிதான் ட்ரெய்லர் அமைந்திருப்பதாகவும் அவர்கள் சிலாகித்துவருகின்றனர்.

பஞ்சாயத்து: இப்படி ஒருபக்கம் ட்ரெய்லரை பலரும் கொண்டாடிக்கொண்டிருந்தாலும் விஜய் லியோ ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசியது அதுவும் ஒரு பெண்ணை இழிவுப்படுத்தும் சொல்லில் பேசியது பெரும் பஞ்சாயாத்தை கிளப்பியிருக்கிறது. அதேபோல் லியோ படத்தின் முதல் சிங்கிளான நா ரெடிதான் பாடலிலும் போதை, வன்முறையை குறிக்கும் வரிகள் வந்ததால் அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நா ரெடிதான் பாடலின் வரிகளை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்த ராஜேஸ்வரி ப்ரியா லியோ ட்ரெய்லரை வைத்து விஜய்யையும், லோகேஷ் கனகராஜையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

Rajeshwari Priya Criticized Vijay And Leo Trailer

ராஜேஷ் ப்ரியா பதிவு: இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "லியோ ட்ரெய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? என குறிப்பிட்டு விஜய்யை டேக் செய்துள்ளார்.

மேலும் அவர் ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். லோகேஷ் கனகராஜ் தகுதியில்லாத இயக்குநர். திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X