Leo Success Meet - 2 ரவுண்டு அடித்துவிட்டா ஸ்கூலுக்கு போறாங்க?.. விஜய்யின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: Leo Success Meet (லியோ சக்சஸ் மீட்) லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய் பேசியதற்கு ராஜேஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
லியோ படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இதுவரை மொத்தம் 540 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்திருக்கிறது. இந்த சூழலில் படத்தின் சக்சஸ் மீட் சில நாட்களுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

விஜய் பேச்சு: இதில் பலரும் எதிர்பார்த்தபடியே விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார். அதேபோல் நா ரெடிதான் பாடலின் வரிகள் சந்தித்த சர்ச்சை குறித்தும் பேசினார். அதுதொடர்பாக பேசிய விஜய், "நா ரெடிதான் பாடலின் சில வரிகள் பிரச்னையை சந்தித்தன. விரல் இடுக்குல தீ பந்தம் என்ற வரி பிரச்னை ஆனது. அது ஏன் சிகரெட்டாகத்தான் இருக்க வேண்டுமா?.. பேனாவாகக்கூட இருக்கலாமே. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி அருகில்கூடத்தான் மதுக்கடை இருக்கிறது. அதற்காக தினமும் இரண்டு ரவுண்டு அடித்துவிட்டா பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கிறார்கள் என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் இது விஜய்யின் பொறுப்பற்றத்தனத்தை காட்டுவதாகவும் ஓபனாக சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
ராஜேஸ்வரி ப்ரியா: அந்தவகையில் நா ரெடிதான் பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ராஜேஸ்வரி பிரியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டும் பாருங்கள் என்று கூறாமல் தளபதியாக பார்க்க சொல்கிறார்.
சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது: தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்றும் பேசுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. நெகட்டிவ் கேரக்டரில் மட்டும் நீங்கள் புகை மதுவை பயன்படுத்தவில்லை.
நெகட்டிவ் அப்பா: லியோ திரைபடத்தில் பள்ளிக்கு செல்லும் தன் பிள்ளை சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட்டின் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மழுப்பி பேசாதீர்கள்.
2 ரவுண்டு பேச்சு: மக்களை ஆணையிட சொன்னீர்கள் .நானும் மக்களில் ஒருவர்தான் இனி மது,புகை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றோரால் உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை. மாணவர்கள் மத்தியில் மது,கஞ்சா,புகை மற்றும் பல போதை பொருள்கள் புழக்கத்தினை கண்ணெதிரே காண்பிக்கத் தயாராக உள்ளேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











