Vijay: நானும் மக்களில் ஒருவர்தான்.. ஆணையிட்டால் அடிபணிவீர்களா விஜய்.. ராஜேஸ்வரி பிரியா விளாசல்!

சென்னை: விரல் இடுக்குல தீபந்தம் என்பதை பேனா என்று கூட மாத்தியிருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் லிரிக்ஸை தூக்கி இருந்தோம் என்றும் சினிமாவை சினிமாவாக பாருங்க என நடிகர் விஜய் ராஜேஸ்வரி பிரியாவுக்கு பதிலடி கொடுத்த நிலையில், தற்போது அதற்கு ராஜேஸ்வரி பிரியா ட்வீட் போட்டு நடிகர் விஜய்யை விளாசி உள்ளார்.

லியோ படத்தில் இடம்பெற்ற "நா ரெடி தான் வரவா" பாடலில் இடம்பெற்ற வரிகள் தியேட்டரில் "டவுன் டவுன் டவுனாக" மாற காரணமே ராஜேஸ்வரி பிரியா தான்.

Rajeshwari Priya slams Vijay speech at Leo Success Meet

விஜய் பேச்சு: சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்றும் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள், மது அருந்துவது போன்ற காட்சிகள், பாடல் வரிகளை யாரும் நிக்க சண்டைக்கு வரக் கூடாது என்கிற ரேஞ்சில் நடிகர் விஜய் பேசி ராஜேஷ்வரி பிரியாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், ராஜேஸ்வரி பிரியா தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பெரிய ட்வீட்டை போட்டுள்ளார்.

ராஜேஸ்வரி பிரியா பதிலடி: சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டும் பாருங்கள் என்று கூறாமல் தளபதியாக பார்க்க சொல்கிறார்.

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்றும் பேசுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

Rajeshwari Priya slams Vijay speech at Leo Success Meet

நெகட்டிவ் கேரக்டரில் மட்டும் நீங்கள் புகை மதுவை பயன்படுத்தவில்லை.லியோ திரைபடத்தில் பள்ளிக்கு செல்லும் தன் பிள்ளை சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட்டின் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மழுப்பி பேசாதீர்கள்.

நான் ஆணையிடவா: மக்களை ஆணையிட சொன்னீர்கள் .நானும் மக்களில் ஒருவர்தான் இனி மது,புகை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றோரால் உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை.

மாணவர்கள் மத்தியில் மது,கஞ்சா,புகை மற்றும் பல போதை பொருள்கள் புழக்கத்தினை கண்ணெதிரே காண்பிக்கத் தயாராக உள்ளேன் நடிகர் விஜய்" என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X