twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ்க்கு எதிர்ப்பு : ராஜேஸ்வரி பிரியா போராட்டம் - ஸ்வேதா ரெட்டி பங்கேற்பு

    பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. ராஜேஸ்வரி பிரியா தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் பிக்பாஸ் தொகுப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார் எழுப்பிய டிவி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டியும் பங்கேற்றார்.

    பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பலருக்கும் தனித்தனி ஆர்மியே செயல்படுகிறது. இப்படி இருக்கையில் ஆபாசங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.

    Rajeswari Priya protest against Big Boss Swetha Reddy Participates

    கடந்த லோக்சபா தேர்தலின் போது பாமகவில் இருந்து துணிந்து முதலில் பிரிந்து வெளியே வந்தவர்தான் ராஜேஸ்வரி பிரியா. கட்சியில் இருந்து வெளியே வந்ததும், கமலை உடனடியாக சந்தித்து பேசினார். அதனால் எப்படியும் மய்யத்தில்தான் இணைவார் என்ற பேச்சு எழுந்து.. பின் அது பொய்யானது!

    கமல் போல கொடி நாட்டுவாரா விஜய் சேதுபதி.. இந்தியில்! கமல் போல கொடி நாட்டுவாரா விஜய் சேதுபதி.. இந்தியில்!

    அது மட்டுமில்லை.. இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் வறுத்தெடுத்து வருவதுடன், கமலையும் சேர்த்து விமர்சித்து வருவது இணையத்தில் வைரலானது. இப்போது போராட்டமே நடத்தி விட்டார்.

    விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளனர். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு தான் இருக்கிறார்கள் இருந்தும் மறுபுறம் இந்த நிகழ்ச்சியை நிறுத்த கூறி போராட்டம் வலுத்துக்கொண்டே போகிறது ..
    நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் "பிக் பாஸ்" சீசன் 3 நிகழ்ச்சி, 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சினிமா துறையில் இருக்கும் சிலரின் வாழ்க்கையை திருப்பிப்போட்டதை மறுக்க முடியாது உதாரணத்திற்கு நடிகை ஓவியா. அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் ராஜேஸ்வரி பிரியா தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிக பெரிய அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி வலியுறுத்தினர்.

    பொதுமக்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டி பங்கேற்றார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்களை படுக்கைக்கு அழைத்ததாக டிவி தொகுப்பாலினி ஸ்வேதா ரெட்டி, காயத்ரி குப்தா ஆகியோர் புகார் கூறியிருந்தனர். தெலுங்கு பிக்பாஸ் பற்றி பரபரப்பை பற்ற வைத்த ஸ்வேதா ரெட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் ராஜேஸ்வரி பிரியா நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார்.

    பிக் பாஸ் சீசன் 3க்கு எதிராக என்னதான் போராட்டம் நடந்து கொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் டிவி விளம்பரத்திற்காகவும்,நிகழ்ச்சி டி.ஆர்.பிக்காகவும் அதனை ஒளிபரப்பிக்கொண்டே தான் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை சீசன்களை ஒளிபரப்புவார்களோ தெரியலையே.

    English summary
    Rajeswari Priya of all people political party has been raising her voice since many days to ban the Bigg Boss in Tamil Nadu, it is well known. She has been questioning Kamal Haasan how he can conduct Bigg Boss like shows being the president of one of the political parties.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X