»   »  ரஜினியின் ஜப்பான் செல்வாக்கு

ரஜினியின் ஜப்பான் செல்வாக்கு

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜப்பானில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில்ஆற்றிய உரையின்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் அந்நாட்டு நாடாளுமன்றமானடயட்டின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரை நிகழ்த்தினார்.

தனது உரையின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம்இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் வெளியிட்டார்.

பிரதமர் பேசுகையில், தமிழ் சூப்பர் ரஜினிகாந்த்தின் படங்களுக்கு ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதேசமயம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஒடோரி மகாராஜா (ரஜினியின் முத்து படம் ஆங்கிலத்தில் தி டான்ஸிங் மகாராஜா,ஜப்பானிய மொழியில் ஒடோரி மகாராஜா என்ற பெயர்களில் வெளியானது) படம்இங்கே வெளியானபோது அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததாக அறிந்துமிகுந்த மகிழ்ச்சியுற்றேன். இங்குள்ள இளைஞர்களை அந்தப் படம் வெகுவாககவர்ந்தது எனக்கு வியப்பாக உள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான உறவு என்று வரும்போது இரு நாட்டு மக்களுக்கிடையேஏற்படும் உறவும் மிக முக்கியமானது. இதை ஜப்பான் மக்கள் நிரூபித்துள்ளனர்.

இந்திய ஹோட்டல்களுக்கு ஜப்பானில் நல்ல வரவேற்பு உள்ளதாக எனக்குத்தெரிவிக்கப்பட்டது. சமீப காலத்தில் இந்திய ஹோட்டல்கள் இங்குஅதிகரித்துள்ளதாகவும் அறிந்தேன்.

அதேபோல ஜப்பான் ஹோட்டல் செயின்களான சுஷி, டெம்புரா ஆகியவையும்இந்தியாவில் காலூன்றி வருகின்றன.

2007ம் ஆண்டு இந்திய, ஜப்பானிய நட்புறவு ஆண்டாகும். அதேபோல இந்திய,ஜப்பானிய சுற்றுலா பரிமாற்ற ஆண்டும் ஆகும். இரு நாடுகளுக்கிடையிலான வான்வழித் தொடர்பும் (விமானப் போக்குவரத்து) அதிகரிக்கும் என உறுதியாகநம்புகிறேன்.

ஜப்பானிய இளைஞர்களும், பெரியவர்களும் இந்தியாவுக்கு அடிக்கடி வர வேண்டும்.பாரம்பரிய இந்தியாவையும், நவீன இந்தியாவையும் நீங்கள் பார்த்து மகிழ வேண்டும்என்றார் மன்மோகன் சிங்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, ஜப்பானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பெருமைப்படுத்திப் பேசியது ரஜினிக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகுக்கும் மிகப்பெரிய கெளரவம் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil