Rajini 170 - ரஜினி 170.. அடுத்த மாதம் தொடங்குகிறதா ஷூட்டிங்?

சென்னை: Rajini 170 (ரஜினி 170) ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதமே தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த, தர்பார் படத்தின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அவரது சம்பளம் வெகுவாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் சூழலில் ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 Rajini 170th Movie Shooting will start from next month

ஆகஸ்ட்டில் ரிலீஸ்: ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகும் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த மாதம் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் ஜெயிலர் ஹிட்டடிக்கும். அண்ணாத்த, தர்பார் படங்களின் தோல்விக்கு ரஜினியும், பீஸ்ட் படத்தால் கலாயக்கப்பட்ட நெல்சனும் இதில் தரமான கம்பேக் கொடுப்பது உறுதி எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

லால் சலாம்: ஜெயிலர் படத்துக்கு பிறகு தனது மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் தற்போது நடித்துவருகிறார் ரஜினி. இதில் விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர் மொத்தம் 50 நிமிடங்கள்வரை படத்தில் வருவார் என கூறப்படுகிறது.

ஜெய்பீம்: இதற்கிடையே ஜெயிலர், லால் சலாம் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளைவிட ஒரு மடங்கு அதிகம் இருப்பது ரஜினி நடிக்கவிருக்கும் அவரது 170ஆவது படத்தில். ஏனெனில் அந்தப் படத்தை இயக்குவது ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல். அந்தப் படத்தை இயக்கி பெரும் விவாதத்தை எழுப்பி மிகச்சிறந்த இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் அவர் இப்போது ரஜினியுடன் இணைந்திருப்பதால் நிச்சயம் இது அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

போலி என்கவுன்ட்டர்: படத்தின் கதை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அதன்படி ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் உண்மையில் நடந்த போலி என் கவுண்ட்டரை வைத்து இந்தப் படம் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. படத்தில் யார் யார் பணியாற்றப்போகிறார்கள் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

அடுத்த மாதம் ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதமே படக்குழு ஷூட்டிங் செல்லவிருப்பதாக கோடம்பாக்கத்தில் புதிய தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் திருவனந்தபுரத்தில் செட் போட்டு அதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X