twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத் துளி

    By Staff
    |

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் உள்பட 4 பேருக்கு எதிராக கடத்தல், சட்டவிரோதமாக முடக்கி வைத்தல், ஆட்களை வைத்துத் தாக்கியது ஆகியவை தொடர்பாககொடுக்கப்பட்ட புகார்களை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபம் உள்ளது. இந்த இடம் தனக்குச் சொந்தமானது என்றுமனோகர் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தனது புகாரில், ரஜினிகாந்த் தனது ஆட்களை வைத்து, கடத்திச்சென்று மிரட்டிக் கையெழுத்து பெற்றதாகவும், அவரது ஆட்கள் தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே ராகவேந்திரா மண்டப மனோகரன் குழுவினர் அத்துமீறி நுழைந்து, மிரட்டியதாக ரஜினி தரப்பில் புகார் செய்யப்பட்டது. இந்த மனுவைமாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ரஜினிகாந்த் உள்பட நான்கு பேர் மீது, சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்மனோகர் மனு செய்தார். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோகரன் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,மனோகரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து மனு குறித்து சட்டப்படி முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் மனோகரன் ஆஜராகி ரஜினி உள்பட 4 பேருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து ரஜினி உள்பட 4 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டது.

    முன்னதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யும்படி ரஜினி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலைசுப்ரமணியன், இந்த புகாரில் ஏமாற்றுதல், சதி, நம்பிக்கை மோசடி ஆகிய அம்சங்கள் எதுவும் இல்லை. ஆனால்கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், சொத்தை அபகரிக்க காயப்படுத்துதல் போன்ற குற்றங்கள் இருப்பதால் மனோகரன் தனிப்பட்டமுறையில் மனு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.

    Read more about: chennai complaint tamilnadu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X