»   »  உள்ளாட்சி தேர்தல்: ரஜினி வாய்ஸ் யாருக்கு?

உள்ளாட்சி தேர்தல்: ரஜினி வாய்ஸ் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி யாரையும் ஆதரிக்கவில்லை என்று ரஜினி தலைமைமன்றதின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள மன்ற நிர்வாகிகளுக்கு தகவல்அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலின்போதும் எழும் ரஜினி வாய்ஸ்யாருக்கு என்ற கேள்வி உள்ளாட்சித் தேர்தலிலும் எழுந்துள்ளது.

ரஜினிக்கு அரசியலில் விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ தமிழகத்தில் எந்தத்தேர்தல் நடந்தாலும் சரி, அதில் ரஜினியின் பெயரும் அடிபடுவதுவழக்கமாகி விட்டது.ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பதை அறிய அவரது ரசிகர்கள் ஒவ்வொரு முறையும்இலவு காத்த கிளியாக மாறித் தவம் இருக்கும் நிலை உருவாகி விட்டது.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினிஅறிவிக்க, கோபமான ரசிகர்களில் ஒரு பிரிவினர் அதிமுகவுக்கு ஆதரவாகவும்,இன்னொரு பிரிவினர் திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர்.

ரஜினி மன்றக் கொடியை கார்களில் கட்டியபடி, ரஜினி படத்துடன் திமுக, அதிமுகவேட்பாளர்களுக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் பிரசாரம் செய்தனர்.

இதையடுத்து மன்றத்தின் அனுமதியையும் மீறி மன்றக் கொடி, ரஜினி போஸ்டர்களைபயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்ட ரசிகர்களை மன்றத்திலிருந்து நீக்கினார் மன்றத்தலைவர் சத்யநாராயணா. இதை எதிர்த்து ஆங்காங்கே ரசிகர்கள் போராட்டம்நடத்தினர்.

இந் நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரஜினியின்ஆதரவு யாருக்கு என்ற பழைய கேள்வி மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தேர்தலிலும் ரஜினி யாரையும் ஆதரிக்கவில்லை என்று மன்றத்தலைமை மாநிலம் முழுவதும் உள்ள மன்ற நிர்வாகிகளுக்கு தகவல்அனுப்பியுள்ளதாம்.

மன்றக் கொடி, ரஜினி புகைப்படத்தை யாரும் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்றும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளாராம் சத்யநாராயணா. இதைமீறுவோர் மன்றத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil