Rajini: “K.பாலச்சந்தர் கடைசியா ஆசையோடு கேட்டும் நோ சொல்லிட்டார்..” ரஜினி இப்போ ரொம்ப மாறிட்டார்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்பகால வளர்ச்சியில் மிக முக்கியமானவர் கே பாலச்சந்தர். ஆனால், அவர் கடைசியாக ஆசையோடு கேட்டும் ரஜினி ஒரு படத்தில் நடிக்க மறுத்துவிட்டது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
கே பாலச்சந்தரின் கடைசி ஆசை
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினியின் ஆரம்பகால வளர்ச்சியில் அவருக்கு பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் கே பாலச்சந்தர் தான். அவரால் தான் ரஜினியும் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மட்டும் இல்லாமல் கமல்ஹாசனும் கே பாலச்சந்தரின் பட்டறையில் இருந்து பட்டைத் தீட்டப்பட்டவர் தான். இரு பெரும் நட்சத்திரங்களை உருவாக்கியவர் என்ற பெருமை கே பாலச்சந்தருக்கு உண்டு. கே பாலச்சந்தரின் இயக்கம் மட்டுமின்றி, அவரது கவிதாலயா நிறுவனம் தயாரி த்த படங்களிலும் ரஜினி நடித்துள்ளார். இந்நிலையில், கே பாலச்சந்தர் கடைசியாக விரும்பி கேட்டும் ரஜினி ஒரு படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அதுகுறித்து கவிதாலயா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். ரஜினி குறித்து கே பாலச்சந்தர் பேசும் போதெல்லாம், அவரின் வளர்ச்சியை நினைத்து ரொம்பவே பெருமை கொள்வாராம். அதாவது கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டிருந்த ரஜினியை பார்த்த கே பாலச்சந்தர் பின்னர் அவரை நடிகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் ரஜினியின் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், ஒருகட்டத்தில் சூப்பர் ஸ்டாராகிவிட்டார்.
முக்கியமாக ரஜினி உச்சத்தில் இருந்த நேரம், அதாவது 2008 ஆண்டுவாக்கில், கே பாலச்சந்தர் கடைசியாக ஒரு படம் இயக்கலாம் என நினைத்துள்ளார். அப்போது இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த சீனி கம் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என முடிவு செய்தாராம். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியை நடிக்க வைக்கலாம் என ஆசைப்பட்ட கே பாலச்சந்தர், அதனை நேராகவே அவரிடம் கேட்டுள்ளார்.
ஆனால், ரஜினியோ உடனடியாக கே பாலச்சந்தரின் ஆஃபரை மறுத்துவிட்டாராம். "இப்போலாம் அந்த மாதிரி படங்கள்ல நடிச்சா நல்லா இருக்காது சார்... அது சரிபட்டு வராது... வேணும்ன்னா கமல் கிட்ட கேட்டுப் பாருங்க.." என நோ சொல்லிவிட்டாராம். இதனால் அதிர்ச்சியான கே பாலச்சந்தர், கமலும் இதுக்கு சரிபட்டு வரமாட்டான் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம். அதன்பின்னர் "நான் அறிமுகப்படுத்துன ரஜினி... இப்போ இருக்குற ரஜினிகாந்த் இல்லை... அவன் பெரிய சூப்பர் ஸ்டாரா மாறிட்டான்.." என கே பாலச்சந்தர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











