தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்கிறார் ரஜினிகாந்த்!
தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கிறார் ரஜினிகாந்த் என செய்தி வெளியாகியுள்ளது.
ஆரம்ப காலத்திலிருந்தே நேரடி தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து வந்தார் ரஜினி. தமிழில் சூப்பர் ஸ்டாராகிவிட்ட பிறகு பிற மொழிப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.
இந்தியில் மட்டும் தொடர்ந்து நடித்தார். பிற மொழிப் படங்களில் நடிக்கும்போது மற்ற ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து வந்தார்.

கதாநாயகுடுவுக்குப் பிறகு
2000-ஆண்டுக்குப் பிறகு அதையும் நிறுத்திக் கொண்டு தமிழில் மட்டுமே நடித்தார். 2008-ம் ஆண்டு குசேலன் படம் தமிழ் - தெலுங்கில் தயாரானது. தெலுங்கில் இந்தப் படத்துக்குப் பெயர் கதாநாயகுடு. இதில் ரஜினியுடன் நடித்தவர் ஜெகபதிபாபு.

மகேஷ் பாபு
அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. இதில் அவருடன் இணைந்து நடிப்பவர் மகேஷ் பாபு.

சூரிய நாராயண ராவ்
இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் மகேஷ்பாபுவின் உறவினருமான சூரிய நாராயணராவ் தயாரிக்கிறார். இதில் மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்று ரஜினியைக் கேட்டுக் கொண்டிருந்தார் சூரிய நாராயணராவ்.

ரஜினி ஒப்புதல்
ஹைதராபாதில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் லிங்கா இறுதிக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ரஜினியைச் சந்தித்த சூரிய நாராயணராவ், தன் வேண்டுகோளை முன்வைத்தார்.
கதையைக் கேட்ட ரஜினி, நடிக்க ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார் சூரிய நாராயணராவ்.

லிங்கா முடிந்ததும்...
லிங்கா முடிந்த கையோடு இந்த புதிய படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











