Rajini: "சாரி.. சாரி.. மை மிஸ்டேக்..” அடி வாங்கிட்டு மன்னிப்பும் கேட்ட ரஜினி: முத்து பட பிரபலம் ஓபன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸானது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி அடி வாங்கிவிட்டு மன்னிப்பும் கேட்டதாக நடிகர் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

Rajini: Actor Ponnambalam Shares his experience with Rajini on Muthu film

அடி வாங்கிட்டு மன்னிப்புக் கேட்ட ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அவர் கேமியோ ரோலில் நடித்துள்ள லல் சலாம், பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், ரஜினியின் முத்து திரைப்படம் கடந்த வாரம் ரீ ரிலீஸானது. 1995ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை கேஎஸ் ரவிகுமார் இயக்கியிருந்தார்.

ரஜினி - கேஎஸ் ரவிக்குமார் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவான முதல் திரைப்படமான முத்து, சூப்பர் ஹிட்டானது. தமிழ்நாடு மட்டுமின்றி ஜப்பானிலும் செம்ம மாஸ் காட்டியது முத்து. இந்தப் படம் ஜப்பானில் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி மீண்டும் ரிலீஸாகியுள்ளது. 4கே, 5.1 சவுண்ட் சிஸ்டம் என அப்டேட் வெர்ஷனாக வெளியான முத்து, 2கே கிட்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், முத்து படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து வில்லன் நடிகர் பொன்னம்பலம் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். முத்து படத்தில் ரஜினியை அடித்து விரட்டுவது போல ஒரு சீன் வரும். அதில் ரஜினிகாந்தை புரட்டி எடுத்திருப்பார் பொன்னம்பலம். அதுவரை காமெடியாக சென்று கொண்டிருக்கும் முத்து, ரஜினி அடி வாங்கும் காட்சி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிடும்.

அந்தக் காட்சி படமாக்கும் போது ரஜினியை உண்மையாகவே அடித்துவிட்டாராம் பொன்னம்பலம். அதாவது அவர் அடிக்கும் போது ரஜினி கொஞ்சம் முன்னாடி வந்ததுவிட்டதால், அடி உண்மையாகவே விழுந்துவிட்டதாம். இதனால் கீழே விழ இருந்த ரஜினியை படப்பிடிப்பில் நின்றிருந்தவர்கள் ஓடிச் சென்று தாங்கிப் பிடித்துள்ளனர். இதனால் பொன்னம்பலம் பயத்தோடு நின்றுள்ளார். ஆனால், ரஜினியோ "சாரி... சாரி... மை மிஸ்டேக்" என அவரை கூல் செய்துவிட்டாராம்.

அதேபோல், உழைப்பாளி படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவரது காலில் அடிபட்டு இருந்ததால் உழைப்பாளி படத்தில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டதாம். இதனையறிந்த ரஜினி பின்னர் முத்து படத்தில் பொன்னம்பலத்தை நடிக்க வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பொன்னம்பலத்துக்கு, 5 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கவும் உதவி செய்தாராம் ரஜினி. இதனை பொன்னம்பலம் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X