Rajini: ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார்... மற்ற நடிகர்கள்... என்ன பிரபு இப்படி சொல்லிட்டார்!

புதுவை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார்.

அப்போது முதல் ரஜினியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ரஜினிக்கு ஆதரவாக சிலரும் அவரது சூப்பர் ஸ்டார் டைட்டிலை ட்ரோல் செய்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என நடிகர் பிரபு கூறியது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 Rajini: Actor Prabhu opines that Rajini is the only superstar

ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார்: தமிழ்த் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். பக்காவான கமர்சியல் படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் ரஜினியின் சாதனைகள் ரொம்பவே பெரியது. அவரது படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைப்பதும் முக்கியமானது.

இந்நிலையில், ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ட்ரெய்லரும் நேற்று வெளியானது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் வைரலானது. அதோடு அவர் சொன்ன 'காகம் - பருந்து' குட்டி ஸ்டோரியும் ரஜினி ஸ்டைல் பஞ்ச் போல இருந்தது. சூப்பர் ஸ்டார் கனவில் மிதக்கும் இளம் ஹீரோக்களுக்கு ரஜினி எச்சரிக்கை செய்கிறாரா என்ற டாக் எழுந்தது. முக்கியமாக நடிகர் விஜய்யை குறிவைத்து தான் ரஜினி குட்டி ஸ்டோரி சொன்னதாக நெட்டிசன்கள் புயலை கிளப்பினர்.

 Rajini: Actor Prabhu opines that Rajini is the only superstar

மேலும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்ட பலரும் ரஜினியை சூப்பர் ஸ்டார் டைட்டிலை வைத்து ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் ரஜினிக்கு சப்போர்ட் செய்யும்விதமாக நடிகர் பிரபு கருத்துத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பிரபு, "ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார், மற்ற நடிகர்கள் எல்லாம் சூப்பர் நடிகர்கள்" என பட்டும் படாமல் பஞ்ச் வைத்துள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், நடிகர் பிரபுவை பங்கமாக கலாய்த்துள்ளனர். "ரஜினி பாவம்யா அவருக்கு ஆறுதல் சொல்ல பிரபுவும் வந்துவிட்டாரே" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதேபோல், "இந்த பஞ்சாயத்து விட்டு வெளியே வாங்கடா 40 வருஷமா இதையே உருட்டினு இருக்கானுங்க, சின்னபுள்ள கிட்ட கேட்டாலே சொல்லும். இதெல்லாம், அரசியல் ஆதாயத்துக்கும் விளம்பரதுக்கும் கூலிக்கும் பேசுறது விட்டுத் தள்ளுங்க" என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X