Rajini Ajith: "அடுத்து அஜித்தை டார்க்கெட் செய்யும் ரஜினி.." தலைவர் 171 சர்ப்ரைஸ் அப்டேட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

மேலும், ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே தலைவர் 171 படத்தின் பின்னணியில் அஜித்தை ரஜினி டார்க்கெட் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 Rajini Ajith: Ajith is expected to act in Rajinikanths Thalaivar 171

அஜித்தை டார்க்கெட் செய்யும் ரஜினி : ஜெயிலர் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஜெயிலர் படத்துக்கு கிடைத்த வெற்றியை பார்த்து உற்சாகமான ரஜினிகாந்த், அடுத்ததாக தலைவர் 170ல் நடிக்க ரெடியாகிவிட்டார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

செப்டம்பர் இறுதிக்குள் தலைவர் 170 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் 171வது திரைப்படம் குறித்தும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவே ரஜினியின் கடைசிப் படமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கினார். இதுவரை லோகேஷ் இயக்கிய நான்கு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. அதேபோல் தற்போது விஜய் நடிப்பில் லியோவை இயக்கியுள்ள லோகேஷ், இந்தப் படத்திலும் இன்டஸ்ட்ரி ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் படங்களின் மிகப் பெரிய சக்சஸாக பார்க்கப்படுவது, மல்டி ஸ்டார் காஸ்டிங் தான். மாஸ்டரில் விஜய் - விஜய் சேதுபதியை எதிரும்புதிருமாக களமிறக்கி மாஸ் காட்டினார். விக்ரம் படத்தில் கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என இன்னும் பெரிய ஹிட் லிஸ்ட்டுடன் களமிறங்கினார். இப்போது லியோவில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின் என பெரும் கூட்டணியுடன் சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கிறார்.

இதனால், தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் அஜித்தை நடிக்க வைக்கலாம் என பிளான் செய்துள்ளாராம். இதற்கு ரஜினி, அஜித் சைடில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் எனினும், சர்ப்ரைஸ்ஸாக இக்கூட்டணி இணையலாம் எனவும் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ வெளியான பின்னர் தான், தலைவர் 171 படத்தில் ரஜினி - அஜித் கூட்டணி இணையுமா என்பது குறித்து அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X