Rajini Ajith: "நெருப்புடா... நெருங்குடா... பார்ப்போம்...” நேருக்கு நேர் மோதிய ரஜினி - அஜித்!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.

ரஜினியின் பில்லா ரீமேக்கில் அஜித் நடித்ததால், இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

 Rajini Ajith: Rajini and Ajith playing chess fan-made poster is trending now

இந்நிலையில், ரஜினியும் அஜித்தும் நேருக்கு நேர் மோதும் செம்ம கெத்தான போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

நேருக்கு நேர் மோதிய ரஜினி - அஜித்
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித் இருவரும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் 170 பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். அதேபோல் அஜித்தும் துணிவு படத்திற்குப் பின்னர் தற்போது விடாமுயற்சியில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினி, திருவனந்தபுரத்தில் தொடங்கிய தலைவர் 170 பட பூஜையில் கலந்துகொண்டார். அதன் பின்னர் திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு, இப்போது நெல்லை பணங்குடி பகுதியில் நடைபெறும் தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ரஜினிக்குப் பிறகு அஜித் தான் ஸ்டைல் மன்னன் என ரசிகர்களிடம் ஒரு பேச்சு உள்ளது.

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித்துடன் நயன்தாரா, பிரபு, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் செம்ம ஸ்டைலிஷாக மாஸ் காட்டியிருந்தார் அஜித். பில்லா வெற்றிக்குப் பின்னர் ரஜினியின் வாரிசு அஜித் தான் என ரசிகர்கள் கொண்டாடினர்.

அதேநேரம் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் அஜித்தும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்கள் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படியொரு தரமான சம்பவம் இதுவரை நடக்கவே இல்லை. ஆனாலும் ரசிகர்கள் தங்களது நம்பிக்கையை இதுவரை இழக்கவும் இல்லை. இந்த சூழலில் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது ஒரு போஸ்டர். டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கிலும் உள்ளது போஸ்டர்.

அதில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தும் மாஸ் & கிளாஸ்ஸாக செம்ம கெத்தாக அமர்ந்துள்ளனர். இருவருமே கூலர்ஸ் அணிந்துகொண்டு செஸ் விளையாடுவதை போல இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. முக்கியமாக ரஜினியும் அஜித்தும் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வெறித்தனம் காட்டியுள்ளனர். கிளாஸிக்கலாக உருவாகியுள்ள இந்தப் போஸ்டர், ரசிகர்களின் ஃபேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இது ரியலாக இருப்பதால் ரஜினி - அஜித் என இருதரப்பு ரசிகர்களும் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X