»   »  ரஜினிக்கு ஒரு நியாயம்... அஜித்துக்கு ஒரு நியாயமா வைரமுத்து?

ரஜினிக்கு ஒரு நியாயம்... அஜித்துக்கு ஒரு நியாயமா வைரமுத்து?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கவிப்பேரரசு' வைரமுத்து மேடைகளில் பேசி மாட்டிக்கொள்வதே வாடிக்கையாகி விட்டது.

கடந்த ஆண்டு கபாலி படம் வெளியான மூன்றாவது நாளே ஒரு அரிமா சங்க மேடையில் அந்த மேடைக்கு சம்பந்தமே இல்லாமல் கபாலி ஒரு தோல்விப்படம் என்று ஏளனமாக பேசி மாட்டிக்கொண்டார். கபாலி அந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் ஆக அமைந்தது. வைரமுத்து பேசியதற்கு பின்னால் இருந்த சாதி மற்றும் வாய்ப்பு அரசியல் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.

 Rajini, Ajith... Vairamuthu's partiality

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு மேடையில் வைரமுத்து பேசும்போது 'படத்தை விமர்சிப்பவர்கள் கவனமாக விமர்சிக்க வேண்டும். ஒரு தோல்விப் படமும் 20 மாத பிரசவக் குழந்தை என்பதை மறந்துவிடக் கூடாது' என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சு விவேகம் படத்துக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கானது.

ரஜினிக்கு ஒரு நியாயம்... அஜித்துக்கு ஒரு நியாயமா? என்று சினிமா விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

English summary
When Kabali released, Vairamuthu mentioned it as flop. But now he is batting for Ajith's Vivegam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil