»   »  2.ஓவுக்காக மொராக்கோ செல்லும் ரஜினி - ஷங்கர் குழு!

2.ஓவுக்காக மொராக்கோ செல்லும் ரஜினி - ஷங்கர் குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2.ஓ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக மொராக்கோ செல்கிறார்கள் ரஜினிகாந்த், ஷங்கர் உள்ளிட்ட குழுவினர்.

சென்னையில் இரண்டு கட்டங்களாக நடந்த 2.ஓ படப்பிடிப்பு, இப்போது டெல்லியில் நடந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த படப்பிடிப்பில் ரஜினி, அக்ஷய் உள்ளிட்டோர் பங்கு பெறுகின்றனர்.


Rajini - Akshay to fly Morocco for 2.O

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், பத்மவிபூஷன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் ரஜினி, அதற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கிறார்.


இரு வாரங்களுக்குப் பிறகு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் முக்கிய காட்சிகள் சிலவற்றை படமாக்கவிருக்கிறார் ஷங்கர். இதற்காக ரஜினி, அக்ஷய், எமி ஜாக்ஸன் உள்ளிட்டோர் மொராக்கோ நாட்டுக்குப் பயணமாகிறார்கள்.


டெல்லியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை நேற்று சந்தித்த பிறகு, இத்தகவலை இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

English summary
The 2.O team including hero Rajini and Amy Jackson might travel to Morocco for the next schedule of the shoot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil