»   »  பிரமாண்ட அரங்கில் ரஜினி - எமி பாடல் காட்சி... ஆகஸ்டில் படப்பிடிப்பு!

பிரமாண்ட அரங்கில் ரஜினி - எமி பாடல் காட்சி... ஆகஸ்டில் படப்பிடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அடுத்த வெளியீடான 2.ஓ படத்துக்கு இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்தப் பாடலை சென்னையில் பிரமாண்ட அரங்கில் படமாக்கவிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

ரஞ்சித் இயக்கத்தில் 'காலா' படத்தில் இப்போது நடித்துவரும் ரஜினி, விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை முடிக்கிறார்.

அதன் பின்னர் அவர் தன் தாடி கெட்டப்பை கலைத்துவிட்டு இளமை லுக்குக்கு மாறுகிறார். காலாவில் அவருக்கு இளமை தோற்றம் உள்ளது.

எமி ஜாக்ஸனுடன்

எமி ஜாக்ஸனுடன்

அதே நேரம் '2.0' படத்துக்காக ஒரு பாடல் காட்சியில் அவர் எமி ஜாக்ஸனுடன் நடனம் ஆடுகிறார். காலாவின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இந்தப் பாடல் காட்சியை ரஜினி முடிக்கிறார்.

12 நாட்கள்

12 நாட்கள்

இந்தப் பாடல் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரம்மாண்டமான அரங்கில் 12 நாட்கள் இப்பாடலை படமாக்கவிருக்கிறார் ஷங்கர்.

ரஹ்மான்

ரஹ்மான்

இந்தப் பாடலுக்கான பாடலை உருவாக்கிக் கொடுத்துவிட்டார் ஏஆர் ரஹ்மான். பாஸ்கோவின் நடன அமைப்பில் இந்தப் பாடலைப் படமாக்குகிறார் ஷங்கர்.

ரூ 450 கோடி

ரூ 450 கோடி

ரூ 450 கோடி செலவில் இந்தியாவின் காஸ்ட்லி படமாக உருவாகிவரும் 2.ஓ படத்தை லைகா தயாரிக்கிறது. உலகம் முழுவதும் 20 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது 2.ஓ.

English summary
Shankar is planning to shoot the final song for Rajinikanth's 2.O in August
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil