2.O பாடல் காட்சி... ஒத்திகை முடிந்தது.. நாளை முதல் படப்பிடிப்பு!
சென்னை: ரஜினிகாந்த் - எமி ஜாக்சன் பங்கேற்கும் 2.ஓ பாடல் காட்சிக்கான ஒத்திகை இன்றுடன் முடிந்தது.
லைகா புரொடக்ஷன்ஸின் ரூ 400 கோடி பட்ஜெட் படமான 2.ஓ படத்தின் வசனக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.

இந்தப் படம்ல முழுக்க முழுக்க 3 டியில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமாகும். முதல் முறையாக 3 டி கேமிராவில் ஒரு திரைப்படம் முழுமையாகப் படமாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படாமல் உள்ளது. இந்தப் பாடல் விஷுவலாக இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இருக்க வேண்டும் என இயக்குநர் ஷங்கர் டிசைன் செய்துள்ளார்.
ரஜினி, எமி ஜாக்ஸன் பங்கேற்கும் இந்தப் பாடல் காட்சிக்காக சில தினங்கள் ஒத்திகைப் பார்த்தனர். இன்றுடன் ஒத்திகை முடிந்தது. நாளை முதல் இந்தப் பாடல் காட்சி சென்னை அருகே படமாக்கப்படுகிறது.
இதுவரை காலா கெட்டப்பில் இருந்த ரஜினி, இப்போது தாடியை எடுத்துவிட்டு கெட்டப் மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











