ஒரே சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் ரஜினி -அஜித் படங்களின் சூட்டிங்.. சந்திப்பு நிகழுமா?
சென்னை : நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நேரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன.
இதனிடையே ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித்தின் துணிவு படம்
நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் மூன்றாவது முறையாக மூவர் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்க, போனிகபூர் தயாரித்துள்ளார். படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித்திற்கு ஜோடியாகியுள்ளார். படம் ஐதராபாத், பாங்காக், விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி படம் ரிலீசாக உள்ளது.

பொங்கல் ரிலீசுக்கு தயாராகும் துணிவு
இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ஹீரோ -வில்லன் என்ற இரட்டை கெட்டப்புகளில் அஜித் நடித்துள்ள நிலையில் மங்காத்தா படத்திற்கு பிறகு நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ள அஜித்தை காண்பதற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

த்ரில்லர் ஜானரில் உருவாகும் துணிவு
த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ள நிலையில், படத்தில் ஜான் கொக்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அஜித் மற்றும் ஜான் கொக்கன் நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அஜித் -ஹெச் வினோத்தின் முந்தைய படங்களான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை அஜித் ரசிகர்களை வெகுவாக கவர தவறிய நிலையில், துணிவு படம் அந்தக் குறையை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் பாடல் சூட்டிங்
இதனிடையே படத்தின் பாடல் சூட்டிங் இன்றைய தினம் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் படத்தின் டப்பிங் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தில் அஜித் இரண்டு பாடல்களுக்கு சூப்பரான ஆட்டம் போட்டுள்ளாராம். இன்றைய தினம் சில்லா சில்லா என்ற பாடலின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பான பாடல்
இந்தப் பாடல் விரைவில் லிரிக் வீடியோவாக வெளியாகவுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு கண்டிப்பாக திரையரங்குகளில் ஆட்டம் போடும் வகையில் அமைந்துள்ளதாக கல்யாண் மாஸ்டர் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார். இந்தப் பாடலில் அஜித்தின் ஸ்டைல் மிகவும் கிளாசாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் -ரஜினி படங்களின் சூட்டிங்
அஜித்தின் சில்லா சில்லா என்ற இந்தப் பாடல் இன்றைய தினம் சென்னையின் பிரபல சூட்டிங் ஸ்பாட்டில் சூட்டிங் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதே செட்டில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. இருவரும் ஒரே இடத்தில் உள்ள நிலையில், இருவரும் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











