40 ஆண்டுகளுக்குப் பின்.. மீண்டும் ஒரே படத்தில் ரஜினி-கமல்.. கேட்கும்போதே சும்மா அனல் பறக்குதே!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Recommended Video

சர்கார் ஷூட்டிங் நடந்த இடத்தில் ரஜினியின் தர்பார் ஷூட்டிங்

சென்னை: ரஜினியும் கமலும் இணையும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரெய்லர் ரிலீஸ், இசை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தர்பார் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது.

கமல் படங்கள்

கமல் படங்கள்

மற்றொருபுறம் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் கமல். இந்த படத்தை தொடர்ந்து தலைவன் இருக்கிறான் எனும் படத்தில் அவர் நடிக்கிறார். அந்த படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் கமல் ஈடுபட உள்ளார்.

சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா

அதேசமயம் சிவா இயக்கும் படத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன் என ஏற்கனவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் ரஜினி. அதன்படி அவரது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

மீண்டும் ரஜினி - கமல்

மீண்டும் ரஜினி - கமல்

இந்த படத்தில் தான் ரஜினியும் கமலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த படத்தை தயாரிக்கப் போவது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் கெஸ்ட் ரோலில் கமல் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

கமலின் உங்கள் நான்

கமலின் உங்கள் நான்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல் பிறந்தநாளையொட்டி நடந்த உங்கள் நான் நிகழ்ச்சியில், ரஜினி கலந்துகொண்டு கமலை வாழ்த்தினார். இருவரும் ஒன்றாக இணைந்து அரசியலில் பயணிக்கப் போவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்த சூழலில் கமலும், ரஜினியும் மீண்டும் திரைப்படத்தில் இணைய உள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகாலத்தில் ரஜினியும், கமலும் இணைந்து பல படங்களில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X