G.O.A.T தலைப்பு.. ரஜினியை தாக்கும் வசனம்.. ரஜினி,விஜய் மீண்டும் தொடங்கிய சண்டை!
சென்னை: ரஜினி மற்றும் விஜய் சண்டை தொடங்குவதற்கு GOAT திரைப்படம் மிக முக்கியமான காரணமாக இருக்கும் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.
லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே, நடிகர் விஜய் கமிட்டான படம் தளபதி 68. 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் முதன்முதலாக வெங்கட்பிரபுவுடன் கைகோர்த்துள்ளார். தளபதி 68 படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் அமெரிக்காவில் தொடங்கியது.
G.O.A.அர்த்தம் Greatest Of All Times: இப்படத்திற்கு ஆங்கிலத்தில்தான் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியானது. பசில் அல்லது பாஸ் என்பது தான் தலைப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுவந்த நிலையில் படத்திற்கு GOAT என தலைப்பு வைக்கப்பட்டதாக இணையத்தில் தகவல் கசிந்து வருகிறது.
அந்தணன் பேச்சு: இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தனது யூடியூப் தளத்தில் பேசிஉள்ளார். அதில். தளபதி 68 படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று, பல பேர் பலவிதமா பேசிக்கொண்டிருந்த நேரத்தில் நேற்று வலைப்பேச்சில் படத்தின் பெயர் GOAT என்று சொல்லி இருந்தோம். கிட்டத்தட்ட 99 சதவீதம் இந்த படத்திற்கு GOAT என்று தலைப்பு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. விஜய்க்கும் இந்த தலைப்பு பிடித்துவிட்டதாகவும், டைட்டில் போஸ்டருக்கான சிஜி வேலையும் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இது என்ன சிதம்பரம் ரகசியமா: எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே இந்த சினிமாவை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், எப்போதும் இல்லாத வழக்கம் அண்மை காலமாக தற்போது சினிமாவில் வந்து கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், படத்தின் தலைப்பை சொல்வதற்கே பல மாதங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது இணையத்தில் எப்படியாவது கசிந்து விடுகிறது. மக்களிடம் தலைப்பை சொல்வதற்கு என்ன தயக்கம் இது என்ன சிதம்பரம் ரகசியமா.
படத்தில் என்ன சாதனை: தளபதி 68 படத்தின் தலைப்பு GOAT என்று தகவல் கசியத் தொடங்கியதுமே, இணையத்தில் மீம்ஸ்கள் பரவத் தொடங்கியது. உலகத்தின் தலை சிறந்த மனிதர்களை மட்டுமே GOAT என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த படத்தில் விஜய் செய்யப்போகிற சாதனைகள் என்னென்ன என்பதை படத்தின் காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் போன்றவற்றில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ரஜினி ரசிகர்களை சீண்டுகிறாரா: தளபதி 68 படத்திற்கு GOAT என்று தலைப்பு வைக்கப்பட்டது ரஜினி ரசிகர்களை சீண்டுவதாக இருக்கிறது. ஒரு வேளை GOAT என தலைப்பு வைக்கவில்லை என்றாலும், படத்தின் வசனத்தில் விஜய் GOAT என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ரஜினி நடித்த எந்திரன் படத்தில் நான் கறுப்பு ஆடு என்று சொல்லி இருப்பார். நான் GOAT என்று ரஜினி சொல்லாமல் சொன்னதை, இன்று நான் தான் GOAT என்று வெளிப்படையாக அறிவிக்கிறாரோ என்கிற பேச்சும் எழுந்துள்ளது.
ரஜினி, விஜய் மீண்டும் சண்டை: அது மட்டுமில்லாமல் படத்தில் வரும் வசனங்களும் ரஜினியை நேரடியாக தாக்குவது போல இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. இது எல்லாம் படத்தில் இருந்தால், மீண்டும் ரஜினி விஜய் சண்டை தொடங்கும் அதற்கு GOAT மிக முக்கியமான காரணமாக இருக்கும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











