இது மிகப் பெரிய போராட்டம்... முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியில் ரஜினி, யோகி பாபு!
சென்னை: "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற பெயரில் முக ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த மாதம் 28ம் தேதி திறந்து வைத்தாா்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் காமெடி நடிகர் யோகி பாபுவும் முக ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நேரில் பார்த்து ரசித்தனர்.

ஜெயிலர் படப்பிடிப்புக்கு ரெஸ்ட்
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் ரஜினி. ஜெயிலரை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் லால் சலாம், த செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படங்களில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதனிடையே தற்போது ஜெயிலர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் ரஜினி.

புகைப்படக் கண்காட்சியில் ரஜினி
இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற கண்காட்சியை ரஜினிகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் காமெடி நடிகர் யோகி பாபுவும் இந்த புகைப்பட கண்காட்சியை பார்த்து ரசித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி, "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இது மிகப் பெரிய போராட்டம்
கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். இளம் வயது முதல் முதலமைச்சராக பொறுப்பேற்றது வரையிலான ஸ்டாலினின் புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதனை பார்த்து ரசித்த ரஜினி, முதலமைச்சர் முக ஸ்டாலினின் இந்த வளர்ச்சி மிகப் பெரிய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி வென்றார்.

அமைச்சர் சேகர் பாபு
ரஜினிகாந்த், யோகி பாபு ஆகியோருடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டு வீசதி வாரியத் தலைவர் பூச்சி முருகனும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி, "தலைவரோட 70 வருட வாழ்க்கை அனுபவம் எல்லாவற்றையும் பார்த்தோம். ரொம்ப கடினமான ஒரு வாழ்க்கையை அனுபவித்துள்ளார். முதலமைச்சராக வந்ததற்கு முன்பாக அவரின் 70 வருட போராட்டங்கள் இந்த வண்ணங்களில் தெரிந்தது. இன்னும் அடுத்தடுத்து நமக்கு நல்லது செய்துள்ளார். மீண்டும் மீண்டும் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிப்பார்" என பேசினார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு பற்றி பேசிய ரஜினிகாந்த், அவர் மிகவும் அன்பானவர். விஸ்வாசமானவர். அவருக்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகம் உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











