மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் லிங்கா பூஜை... 3 ஆண்டுகளுக்குப் பிறகு மேக்கப் போட்ட ரஜினி
மைசூர்: மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் இன்று அதிகாலை லிங்கா படத்தின் பூஜை நடந்தது. கிட்டத்தட்ட மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மேக்கப் போட்டு, வேட்டி சட்டையில், முறுக்கு மீசையுடன் கம்பீரமாகத் தோன்றினார் ரஜினி.

கோச்சடையான் படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் பூஜை இன்று அதிகாலை மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி மேக்கப்புடன் புதிய கெட்டப்பில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் அம்பரீஷ், அவர் மனைவி நடிகை சுமலதா மற்றும் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
Comments


Click it and Unblock the Notifications