கொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்

தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து, அந்த வீட்டிற்கு நேரில் சென்று குத்து விளக்கேற்றி வைத்தும் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

Recommended Video

கொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்-வீடியோ

சென்னை: தான் சொன்னபடியே தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இயக்குனர் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களிலும், பிறகு வில்லனாகவும் நடித்து வந்தார் ரஜினி.

அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரித்தவர் கலைஞானம். அதுமட்டுமல்லாமல் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை தந்தவரும் அவர் தான்.

நஷ்டத்தில் கலைஞானம்

நஷ்டத்தில் கலைஞானம்

தேவர் பிலிம்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து, பிறகு தயாரிப்பாளரான கலைஞானம் எழுத்தாளர், வசனகர்த்தா என பல திறமைகளை கொண்டவர். ஆரம்பத்தில் வெற்றிப் படங்களை கொடுத்த அவர், பிறகு ஏற்பட்ட தோல்விகளால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.

பாராட்டு விழா

பாராட்டு விழா

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா எடுத்தார் இயக்குனர் பாரதிராஜா. இதில் ரஜினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசியவர்கள், கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், அரசு அவருக்கு ஒரு வீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

ரஜினி அறிவிப்பு

ரஜினி அறிவிப்பு

பின்னர் பேசிய ரஜினிகாந்த், கலைஞானத்திற்கு தனது சொந்த செலவில் வீடு வாங்கி தர தயார் என மேடையிலேயே அறிவித்தார். கலைஞானம் தனக்கு பிடித்த மாதிரி வீட்டை தேர்வு செய்த பின்னர், அதற்கான பணத்தை தான் கொடுத்துவிடுவதாக ரஜினி கூறினார்.

சொன்ன வார்த்தையை காப்பாற்றினார்

சொன்ன வார்த்தையை காப்பாற்றினார்

சொன்னபடியே கலைஞானத்திற்கு தற்போது வீடு வாங்கி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். விருகம்பாக்கத்தில் 1,320 சதுர அடியில் 3 படுக்கையறைகளுடன் கூடிய வீடு கலைஞானத்திற்காக முடிவு செய்யப்பட்டது. `ரஜினி வீட்டுக்கு வந்து குத்துவிளக்கேற்றி வைத்தால் நன்றாக இருக்கும்' என கலைஞானம் பிரியப்பட்டார்.

குத்துவிளக்கேற்றினார்

குத்துவிளக்கேற்றினார்

இதையடுத்து இன்று காலை ரஜினி அந்த வீட்டிற்கு சென்று, குத்துவிளக்கேற்றி வைத்தார். அப்போது கலைஞானம் மற்றம் அவரது குடும்பத்தினர் ரஜினிக்கு நன்றி தெரிவித்தனர். கலைஞானத்திற்கு பாபா படம் ஒன்றையும் ரஜினி பரிசளித்தார். "நான் சொல்வதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன்", என ரஜினி ஒரு படத்தில் பஞ்ச் டயலாக் பேசுவார். அது நிஜ வாழ்க்கையிலும் உண்மை என நிரூபித்துள்ளார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X